Header Ads



ஸ்ரீ.ல.மு.கா விசேட தேர்தல் கலந்துரையாடலும் புனித இப்தார் நிகழ்வும்

பாஸி பஹ்ஜான்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி  நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மாகாணத்திலுள்ள பிரதான கட்சிகள் தேர்தல் பிரச்சாரப்பணிகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமது தேர்தல் பிரச்சார  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண சபைக்கு முதலாவது பெண் வேட்பாளராக களமிறங்கும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண மகளிர் அணித்தலைவியுமான சல்மா அமீர்ஹம்சாவின் இல்லத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2012-07-27 பிற்பகல் 04.00மணியளவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் அதனைத் தொடர்ந்து புனித நோன்பு திறக்கும் விசேட இப்தார் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து இருவர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 

1 comment:

  1. ''''புனித இப்தார்""

    நபி (ஸல்) அவர்களோ, சஹாபாக்களோ, நேர்வழி வந்த சலபுடைய இமாம்களோ ''புனித இப்தார்'' என்றொரு வார்த்தையை, புனிதம் சேர்த்து பயன்படுத்தியதை அறிய முடியவில்லை.

    நாமும் அவர்கள் பயன்படுத்திய விதமாகவே பயன்படுத்துவதே சிறந்தது.
    மார்க்கத்தில் நிறைய ''புனிதங்கள்'' இடைச்சொருகல் செய்யப்பட்டுள்ளன. தவிர்ந்து கொள்வதே சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.