Header Ads



வடமாகாணத்தில் வட்டமிடும் இஸ்லாமிய விரோத சக்திகள்..!

அபூ அஸ்ஜத்

வடக்கில் முஸ்லிம்கள்களின் வரலாற்று பதிவுகள் அகற்றப்பட வேண்டும் என்ற வேட்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலம் மீண்டும் எற்பட்டுவிட்டது என்ற நிலையினை காணமுடிகின்றது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்டு 23 வருடங்கள் உருண்டோடிய நிலையில் தற்போது அம்மக்கள் தமது தாயகத்தில  மீள்குடியேற செல்கின்றபோது, அங்கு எண்ணிலடங்காத பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தம்வாழ்ந்த பூமியில் தமக்கு இடமில்லையென்று சொல்லுமளவுக்கு ஆக்கிரமிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பின்னர் இஸ்லாமய விரோத சக்திகள் தமது சிறகினை விரித்துள்ளதை காணமுடிகின்றது. அதற்கான நிகழ்வுகள் தொடர்ந்தேச்சயாக மன்னாரில் இடம் பெறுவது நோக்கப்பட வேண்டியுள்ளது.

வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டால் தமது செல்வாக்கு சரிந்துவிடுவதுடன், தமிழீழ கொள்கையினை நடை முறைப்படுத்துவதில் தடைகள் முஸ்லிம்களால் ஏற்படும் என்பதை புரிந்து கொண்ட கடந்த காலங்களில் ஆயுத இயக்கங்களில் இருந்து வந்து பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சில அரசியல் வாதிகள் அரசாங்கத்தின் ஆதரவு சக்தி எங்கெல்லாம் இருக்கின்றதோ அதனை தேடி அழிப்பதுடன், ஜனாதிபதியினை சர்வதேச சமூகத்தின் முன் குற்றவாளியாக காண்பிப்பதற்கு பல நடவடிக்கைகளை இந்த சக்திகள் எடுத்துவருகின்றன. இதற்கு துனையாக பசுந்தோல் போரத்திய புலி அதரவாளர்களும் இருக்காமலில்லை. அது பல வடிவங்களில் தமது அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்கள் அச்சமின்றி தாம் வாழ்ந்த மண்ணில் மிகவும்அமைதியாக வாழ்கின்றனர். அதற்கு காரணமானவர் இந்த நாட்டு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே. அரசில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு பிரதி நிதிகளும் இந்த பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கு ஆற்றிய தியாகங்களும், பங்களிப்பினையும் இந்த ஜனாதிபதியும், நாட்டு மக்களும் மறந்து விட மாட்டார்கள். இன்று மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் காலமுள்ளவரை மறக்கக் கூடியது அல்ல. வடக்கை பொறுத்வரையில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எதனை வடக்கில் செய்தாலும் அதனை விரோத செயல்களாக சர்வதேசத்திற்கு காட்டி வயிறு வளர்க்கும்அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சில அமைப்புக்களும் இடைவிடாது அதனை செய்துவருகின்றமைக்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

இந்த வரலாற்று பின்னணியில் வடக்கில் முஸ்லிம்கள் மீளக் கூடியேற வருகின்ற போது அதனை தடுப்பதில் இனவாதம் மிகவும் உச்ச ஸ்தானத்தில் நிற்பதை கூறாமல் இருக்க முடியாது. மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கு எதிரதாக அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன்.ஆரப்பாட்டங்களையும் நடத்தியது. சன்னார் பிரதேசத்தில முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காமல் .அவர்களுக்கு வேறு  இடத்தில் இடம் வழங்கப்பட்ட போது அதற்கெதிராக மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது. புதுக்குடியிறுப்புக்கும் –எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்க கொடுத்தமை, அரச நிர்வாகத்தின சில உயர் அதிகாரிகள், முஸ்லிம்கள் தமது தேவை நாடி செல்கின்ற போது அவர்களை நிந்தனை செய்கின்றமை போன்ற செயற்பாடுகள் ஏராளம்.

தமது தாயக மண்ணியில் இவ்வாறான தொடரில் இனவாத சக்திகளின் மற்றுமொரு செய்றபட்டின் விளைவாகவே மன்னாரில் அண்மையில் மக்களால் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தின் எற்படுத்தப்பட்ட கலவரமாகும் என்பதையும் தௌவுபடுத்த வேண்டம். இலங்கையின் வரலாற்றில் குறிப்பாக னாதிபதியின் தலைமியலானஅரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகளும், அமைப்புக்களும் நடத்தும் ஆரப்பாட்டங்களும், அரச எதிர்ப்புபோராட்டங்களும் ஏராளம். இது தான் ஜனநாயக நாடொன்றில் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் பாதையாகும். அதனைக் கூட இந்த நாட்டில் செய்வதற்கு இடமில்லை என்றால் இரானுவ ஆட்சி தான் இடம் பெறுகின்றது என்று ஏற்றுக் கொள்ளலாம். மறுபுறம் சிறுபான்மை சமூகத்தினை ஆதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்கி வைத்துக் கொள்வதனை காணமுடிகின்றது.

அண்மையில் மன்னாரில் எற்பட்ட சம்பவத்தின் வரலாற்று குறிப்பை பார்க்க வேண்டியது மேலும் எமது சிந்தைணைக்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட போது மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தில் உள்ள 70 சதவீதமான முஸ்லிம்கள் மக்கள் வெளியேறினர். அங்கு வாழந்த  ஏனைய மக்களின் பிரதானதொழிலாக இருந்து வந்த்து கடற்றொழிலாகும். அந்த மக்கள் தமது தொழிலக்காக உப்பக்குளம் ஆகாந்தப்பிட்டி துறையினை பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு விடத்தல்தீவினை சேர்ந்த கத்தோலிக்க மீனவர்கள் தமது தொழிலினை மேற்கொள் பொருட்டு மன்னார் பகுதிக்கு வந்து பள்ளிமுனை பகுதியில் சில காலம் தொழிலில் ஈடுபட்டனர்இபள்ளிமுனை என்பது முழுமையாக கத்தோலிக்கர்களை கொண்ட கிராம்மாகும்.

இவிடத்தல்தீவு மீனவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தி கண்ட மக்கள் அங்கிருந்து அம்மீனவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர்அவர்கள் பனங்கட்டிகொட்டு என்னும் மற்றுமொரு கத்தோலிக்க கிராமத்தில சல காலம் தொழிலில் ஈடுபட்டனர். அங்கிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களது பரிதாப நிலையினை கண்ட உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்கள் தமக்கு சொந்தமான கோந்தப்பிட்டிதுறையினை பயன்படுத்த அனுமதியளித்தனர். அப்போது பலிகளின் மன்னார் கடல் பிரதேச பொறுப்பாளரதாக இருந்த அமுதன் என்பவர் முஸ்லிமகளுக்கும் விடத்தல் தீவு மீனவர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துஒர்வ ஒப்பந்தம் செய்ய எற்பாடு செய்து, மீண்டும் முஸ்லிம்கள் தமது மண்ண்ல் குடியமர வந்தால் அவர்களது இந்த துறையினை கையளித்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டே அந்த உடன்படிக்கைக்கு சாட்சியாக அவர் கையொப்பமிட்டுள்ளார்.

அதன் பிறகு பல மறை 2005,2006,2007 ஆகிய காலப்பகுதில் மன்னார் உப்புக்குளம் பகுதியில் 80 சதவீதமான முஸ்லிம்கள் மீள்குடியேறியிருந்தனர். அப்போது இந்த  கோந்தப்பிட்டி துறியனை முஸ்லிம்களிடம் கையளிக்கமாறு கோறிய போதெல்லாம் விடத்தல்தீவு கத்தோலிக்க மீனவர்கள் விடாப்பிடியாக அதனை தர மறுத்தே வந்தனர். அப்போது இரு மீனவ சமூகத்திற்கு இடையில் சிறிய மனக்கசப்பு இருந்தே வந்த்து. இந்த நிலையினையடுத்து மன்னார்  அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மன்னார் கடற்றொழில் திணைக்கள் அதிகாரிகள் என பலதரப்பையும் உப்புக்குளம் மீனவர்கள் சந்தித்து நியாயம் பெற்றுத் தருமாறு கோறினர். அவர்களும் சில நடவடிக்கைகனை எடுத்த பொதும் அது போதுமானதாக இருக்கவில்லை.

இதனையடுத்து இரு மினவ சமூகத்திற்கிடையில் சில சம்பவங்கள் இடம் பெற்றன. நீண்ட கால தமது தொழில்துறையினை செய்த மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்படும் போது அம்மக்கள் தமக்கு நியாயம் வழங்குமாறு கோறி வீதிக்கு இறங்குவதை எவரும் பிழையாக நோக்கமுடியாதுஇபொறுமையிழந்த மக்கள் அமைதியான முறையில் சுமார் மூன்று மணி நேரம் தமது எதிர்ப்ப்பை தெரிவித்ததுடன் நியாயத்தை சம்பந்தப்பட்டவர்கள் தாருங்கள் என்று பெண்களும் ஆண்களும் கோறி நின்றனர்.

அவ்வேளை நீதிமன்றிலிருந்த நிதவான் தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வீதிக்கு வந்து சுட்டுத்தள்ளுஇசுட்டுத்தள்ளு என்று பொலீஸாருக்கு பணிப்புரைவிடவே மக்கள் பதற்றம அடைந்தனர், பின்னர்பொலீஸார் கண்ணீர் புகை  மற்றும் குண்டாந்தடி பிரயோகம் என்பனவற்றை மேற்கொண்டனர். இதில் பலர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வீடு திரும்பியிருந்தனர். முஸ்லிம் பெண்கள் பொலீஸாரினால் தாக்கப்பட்டதுடன் அவர்களின் முந்தனை துணிகளும் கிளித்தெறியப்பட்ட சம்பவமும்  இடம் பெற்றது.

இவ்வாறு மன்னார் நகரத்தின் பதற்ற நிலை குறித்து கொழும்பிலிருந்த அமைச்சர் றிசாத் மற்றுமு சட்டதரணி ஹூனைஸ் பாருக் ஆகியோருக்கு தகவல் வந்த்து.கொழும்பில் வேட்புமனு விடயமாக ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்து விசேட விமானம மூலம் மன்னார் தள்ளாடியினை அமைச்சர் வந்தடைந்தார். மன்னாரை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வந்தடையும் போது மாலை 3.30 மணியிருக்கும். அரசாங்க அதிபர்சரத்தரவீந்திர அவர்களின் வாகனத்தில் மன்னார் நகரை நோக்கி பயணித்தனேர். மன்னார் நகரில் எங்கும் பொலீஸ் மற்முவிசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோர் குவிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் றிசாத் உப்புக்குளம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை ஆசுவாசப்படுத்தி பள்ளிவாசலுக்குள் அனைவரும் அழைத்த சென்று பொறுமை காக்குமாறும், அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்க அதிபர் தலைமையில் உயர் மட்ட மாநாடு அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெற்றது. அதில் பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகள், மீனவ சமாசங்களின் தலைவர், மன்னார் குரு முதல்வர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னாரில் காணப்பட்ட இந்த நிலையினை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவர அமைச்சர றிசாத் பதிதுயுதீன் அங்கு விஜயம் செய்தமையினாலேயே முடிந்த்த ஆனால் இன்று அவருக்கு எதிராக இந்த ஆரப்பாட்டத்தின் பின்னணியில் அமைச்சர் செயற்பட்டுள்தாக கட்சிகள் விசமப் பரசாரங்களை தமக்கு சார்பான ஊடகங்களை பயன்படுத்தி செயற்பட்டு வருவதுடன், மன்னாரில் நடக்காதவைகளை நடந்தது போன்று பிழையாக சித்தரித்து முஸ்லிம் சமூகத்திற்கும், வன்னி மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு இன, மத பேதங்களின்றி பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்படும் சதியாகத் தான் பாக்க நேரிடுகின்றது.

வட புலமுஸ்லிம்களும் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளனர் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்திலும் கொண்டு செல்லும் பிழையான பிரசாரங்களுக்கு மன்னார் சம்பவத்தையும் இணைத்து முடிச்சுப் போட்டு அதனை முன்னெடுப்பதன் பின்னணி மீண்டும் தமிழீழத்தின் கருத்துக்களை விதைக்கும் ஒன்றாகவே பாரக்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களே வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து செயற்படும் சக்திகளை முளையிலேயே கிள்ளியெறிவதுடன் பதவி, அந்தஸ்த்துக்களை கடந்து உரிய தண்டனையினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் எமது நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும், சர்வதேச புலி ஆதரவு அழுத்தங்களையும் ஒழிக்க முடியும்.

இந்த நாட்டில் சட்டமும், ஒழுங்கும் தமது ஆட்சியில் சரியாக முன்னனெடுக்கப்படுவதாகவும், அண்மையில் எனது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறித்து  பேசப்படும் விடயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எதிராக  ஏற்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்தும் இந்த சம்பவம் நீதிமன்ற வரலாற்றில் ஒரு புதுமையல்ல என்றும் கூறியுள்ளார். கண்டியில் இடம் பெற்ற கூட்டமொன்றிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதே வேளை சட்டத்தரணிகள் சங்கத்தினர் மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அதே வேளை அமைச்சர் றிசாத் பதியுதீனை நேரடியாக இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்து வடக்கிலும்,கிழக்கிலும்,தெற்கிலும் முஸ்லிம்கள் வீதியில் இறங்கி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எது எவ்வாறாக இருந்த போதும் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நீதியினையும்,நியாயத்தினையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. மீண்டும் இந்த  நாட்டில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என்பதே சமாதானத்தை விரும்பும் மக்களது வேண்டுகோளாகும்.

2 comments:

  1. thayavu seithu katturaikalai pirasurikka mun sari pilai paarkkavum ean enraal niraya eluththu pilaikalum karuththu pilaikalum undo. ithu enathu anpaana vendukoal. please.

    ReplyDelete
  2. புலிகள் புதிய வடிவத்தில் களமிறங்கியுள்ளனர்.
    முதலில் முஸ்லிம்களை ஒரு கை பார்த்துவிட்டு,
    பின்னர் சிங்களவர்களை கவனிக்கலாம் என்று நினைக்கின்றார்கள் போலும்.
    இந்துப் புலிகளை விட கத்தோலிக்கப் புலிகள் தீவிரமாக களத்தில் உள்ளனர்.

    களையெடுக்க வேண்டியது அரசினதும், புலனாய்வுத் துறையினதும் பொறுப்பாகும்.

    ReplyDelete

Powered by Blogger.