Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கான முக்கிய வேண்டுகோள்..!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் !

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுக்கும் வேண்டுகோள்!

சொந்தமண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வடமாகாண முஸ்லிம்களின் அவலக்குரலைக் கேளீர்!

அன்பார்ந்த முஸ்லிம்களே..!

இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன் இரண்டுமணிநேர காலஅவகாசத்துக்குள் வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மீண்டும் கேள்விக்குறியாகும் அபாயநிலையினை இப்பிரசுரித்தின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

விடுதலைப்புலிகளை தோல்வியுறச் செய்து 3 வருடங்கள் கழிந்து முஸ்லிகள் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்கப்படாதபோதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தம் சொந்தமண்ணில் பலசிரமங்களுக்கு மத்தியில் மீள்குடியேறிவரும் நிலையில் அவர்களை மீண்டும் வடக்கிலிருந்து விரட்டியடிப்பதற்கான சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்ற இந்தவிடயத்தை உங்களதுகவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

கடந்தசில தினங்களாக மன்னாரில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தமது பாரம்பரிய மண்ணைவிட்டு வெளியேறி வருகின்ற செய்தியையும் உங்களுக்கு மிக வேதனையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். மீண்டும் சொந்தமண்ணில் மீள்குடியேறச் சென்ற முஸ்லிம்களுக்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்காது அவர்கள் மீள தமது தாயகத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கின்ற சதிச்செயல்கள் மன்னாரிலும் யாழ் குடாவிலும் அரங்கேறி வருகின்றன. முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளில் புதிய மாற்றுமதக் கிராமங்கள் மாவீரர் குடும்பங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு மாற்றீடாக காணிகளை முஸ்லிம்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கும் ஒரு சில சமயத்தலைவர்களும், புலி ஆதரவு அதிகார வர்க்கமும் நேரடியாக தமது எதிர்ப்பை காட்டிவரும் நிலையில் அங்கு முஸ்லிம்கள் நிர்க்கதிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிந்துபெரும் எதிர்ப்பார்ப்புக்களுடன் தமதுசொந்த இடங்களுக்கு மீள்குடியேறச் சென்ற வடபுல முஸ்லிம்கள் இன்றும் குடிசைக் கொட்டில்களிலும், மரநிழல்களிலும், வாழ்கின்ற பரிதாப நிலையை அங்கு சென்றுபார்த்தால் காணக்கூடியதாக இருக்கும். முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒரு கிறிஸ்தவ சகோதரியின் பெயருக்கு தாரைவார்க்கப்பட்டதன் பின்னணியில் இனவாதிகளின் கரங்கள் நீண்டுள்ளன. இதன் பின்னணியில்தான் இன்று நாடுபூராகவும் பேசப்படும் மன்னார் உப்புக்குளம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உப்புக்குளத்தில் நடந்தது என்ன..?

இற்றைக்கு 10 வருடங்களுக்குமுன் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து கிறிஸ்தவ மீனவர்களுக்குதற்காலிகமாக வழங்கிய கோந்தப்பிட்டி மீனவத்துறையினை சமாதானம் ஏற்பட்டு, நாடுபூராகவும் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலும் மீளவழங்க மறுக்கப்பட்டதே இப்பிரச்சினைக்கு பிரதான காரணமாகும். மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் தமது மீன்பிடித்துறையை மீளத்தருமாறு கேட்டபோது அதனை வழங்குவதற்கு கிறிஸ்தவ மீனவர்கள் மறுக்கின்றனர்.

இதன்  பின்னணியில் இயங்கும் இனவாதசக்திகளின் துணிச்சலின் காரணமாக தொடர்ந்தும் அவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றினைசுமார் 3 மணித்தியாலம் மன்னார் நகரில் மேற்கொண்டனர். இங்கு அமைதியான ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்ட முஸ்லிம்களை விரட்டியடிக்குமாறும், அவர்கள் மீதுசுடுமாறும் பொலீஸாருக்கு உத்தரவினை நேரடியாக வீதிக்குவந்து நீதவான் உத்தரவு பிறப்பித்ததன் எதிரொலியே அங்குபதற்றமும், பீதியும் தொடர்வதற்கு காரணமாகியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்துடன் அமைச்சர் றிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி அவருக்கு எதிரான எதிர்வலைகளை நாட்டில் ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை முஸ்லிம் கவுன்சில் வன்மையாககண்டிக்கின்றது. இச்சதி முயற்சியின் பின்னணியானது வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்கு ஒரு முயற்சியாககருத நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்காக இரவுபகலாக தம்மை அர்ப்பணம் செய்துவரும் வடபுலமக்களின் பிரதிநிதியான அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்காகவைத்து இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைநாம் எல்லோரும் நன்கறிவோம். அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் இவர்கள் போன்ற தலைவர்களின் குரல்களை அழித்தொழிப்பதே இந்த சதிகாரர்களின் ஒரே இலக்காகும்.

புலிகள் ஆயுதத்தை வைத்துக் கொண்டு அன்று செய்த முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சதியினை இன்று இன, மதவாதத்தைத் தூண்டி ஒரு சிலர் செயற்படுத்தமுற்படுகின்றனர். இத்தைகைய சதிமுயற்சிகளை தம்மனதால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத எத்தனையோ மக்கள் சகோதர இனங்கள் மத்தியில் இருப்பதையும் அவர்கள் அத்தகைய நடவடிக்கையை மனதாற வெறுப்பதையும் நன்கு அறிவோம்.

22 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அதற்காக பேதங்கள் மறந்தநிலையில் முஸ்லிம்கள் ஒருமித்துகுரல் கொடுக்கவேண்டும் என்றும் இப்பணியினை முன்னெடுக்க நல்லெண்ணம் கொண்டவேற்றுமத சகோதரர்களின் ஆதரவினையும் பெற்றுக் கொள்ளுமாறும் சகல முஸ்லிம் சகோதரர்களையும் நாம் பணிவாக வேண்டுகின்றோம்.

சவால்களுக்கு மத்தியில் மீள்குடியேறியுள்ள வடமாகாண முஸ்லிம்களின் கரங்களை நாங்கள் இப்பொழுது பலப்படுத்தாவிடின் பலநூறு வருடங்கள் வாழ்ந்த பூர்வீகமண்ணை பறிகொடுக்கும் நிலைக்கு நாமும் பங்காளர்களாகுவோம். அந்தவரலாற்று தவறுக்காக எதிர்கால சமூகம் எங்களை குற்றம் கூறும். இன்று உருவாகிவரும் சூழ்நிலையில் வடக்கில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும், அதற்கு தேவையான பூரண ஒத்தாசைகளை வழங்குவதற்கும் நாட்டில் நாலாபுறமும் முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்கவேண்டியது சமூகக் கடமையென நாம் கருதுகின்றோம்.

எனவே வடபுல முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குமாறும் அவர்களின் நலன்களுக்காக பிரார்த்திக்குமாறும் இம் முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுதிரளுமாறும் எமது சமூகத்தின் ஒற்றுமையையும், ஆதரவையும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் முழு உலகுக்கும் வெளிப்படுத்துமாறும் அன்பாக வேண்டுகின்றோம்.

இப்படிக்கு..!

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

3 comments:

  1. நம் சமூகத்தின் தேவைகளை அடையாளப் படுத்தி, அதில் முன்னுரிமை பெறும் அம்சங்களை வரிசைப் படுத்தி, கட்சி பேதங்களின்றி ஒரு சமூகம், ஒரு போராட்டம் என இயங்க வேண்டும;

    ReplyDelete
  2. நாளை வெள்ளிக்கிழமை ஜும்மாவின் பின்னர் நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. Ya Rabb! Apportion to us a fear of You that will prevent us from disobeying You, and obedience to You that will convey us to Your Paradise, and certain faith that will lighten for us the calamities of this world. And grant us enjoyment of our hearing, sight and abilities as long as You grant us life, and make it remaining with us. And let our revenge be on those who have oppressed us, and support us against our enemies. Let not the world be our greatest concern or the limit of our knowledge. Let not our calamity be in our religion, and give not authority over us, due to our sins, to those who do not fear You and will show us no mercy.

    ReplyDelete

Powered by Blogger.