Header Ads



நீதியை பெற்றுக்கொடுக்க சட்டத்துறை தவறிவிட்டது - மன்னார் பள்ளிவாசல் சம்மேளனம்

மன்னாரில் சட்டத்துறை, மக்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க தவறியமையால் மன்னார் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதுடன், விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு உயிரூட்டும் வகையில் மதத் தலைவர்களும், நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டியவர்களும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மன்னார் பள்ளிவாசல்களின் சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.

மன்னாரில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான எருக்கலம்பிட்டிக்கும் புதுக்குடியிருப்புக்கும் சொந்தமான 1200 ஏக்கர் காணியினை ஒருவருக்கு கொடுப்பதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மன்னார் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் விசனம் வெளியிட்டுள்ளது.

இதேபோல் விடத்தல் தீவு, சன்னார் பிரதேசத்தில் முஸ்லிம்களது காணிகள் கபளீகரம் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் மதவாத சக்திகளின் கரம் ஓங்கியுள்ள நிலையில், மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அந்தவகையில் மன்னார் உப்புக்குளம் பிரதேச மீனவர்களுக்கு சொந்தமான கோந்தப்பிட்டி மீன்வாடித்துறையினை, அப்பகுதி மீனவர்கள் பயன்படுத்தவிடாது, விடத்தல்தீவிலிருந்து வந்த மீனவர்கள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளதுடன், உப்புக்குள மீனவர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.

அரசாங்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட காலக்கெடுவை புறந்தள்ளி தமக்கு சாதகமான தீர்ப்பொன்றை விடத்தல் தீவைச் சேர்ந்த மீனவர்கள் பெற்றுள்ளனர். புலிகளினால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் தமது பகுதியில் வந்து கடற்தொழிலை செய்வதற்குகூட அனுமதி கிடைக்காத நிலையில் வேதனையடைந்த உப்புக்குளம் மக்கள் புதன்கிழமை மிகவும் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவ்வேளை இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கலைக்குமாறும், இம்மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடாத்துமாறும் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆத்திரமுற்ற மக்கள் கற்களால் தாக்கியதில் மன்னார் நீதிமன்றம் சிறிய சேதத்திற்குள்ளானது.

இதையடுத்து மன்னார் நகரில் ஏற்பட்ட பதற்றத்தை தடுக்க அரசியல் பிரமுகர்கள் முயன்றனர். இந்நிலையினையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சார்ந்த சிலர் மன்னாரில் முஸ்லிம்களுக்கு எதிராக சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அன்று விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை அச்சுறுத்தியது போன்று இன்று சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இந்நிலை தொடருமெனில் நீதியை எதிர்பார்க்கும் நிறுவனங்களில் இருந்து அது கிடைக்காமல் போவதுடன், இவ்வாறான சக்திகளினால் மன்னார் முஸ்லிம்கள் சிறைப்படுத்தப்படவேண்டிய நிலையே உருவாகும் எனவும் மன்னார் பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

  1. அரசாங்கத்திடம் அடி வாங்கி தோற்றுப் போன புலிப் பயங்கரவாதம், அதன் வெறியை
    முஸ்லிம்கள் மீது காட்ட மீண்டுமொரு முறை முயல்கின்றது.

    நாட்டின் அணித்து முஸ்லிம்களும் இணைந்து இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க
    வேண்டும்.

    மன்னார் ஆயர், அமைச்சர் ரிஷாத் பதீயுத்தீனுக்கு எதிராக ஏற்பாடு செய்த ஞாயிறு ஆர்ப்பாட்டத்தை
    தடை செய்யக் கேட்டு போலீசார் தாக்கல் செய்த தடை உத்தரவு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்ப்பாட்டத்திற்கு
    அனுமதி வழங்கிய மன்னார் நீதிமன்றம், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிர்ப்பை வெளியிட தடை செய்தது,
    தெளிவான நீதித் துரோகம்.

    நீதிமன்றமா, இல்லை புலி மன்றமா?

    ReplyDelete

Powered by Blogger.