Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக கிழக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவ சமூகத்திற்கு சொந்தமான கோந்தபிட்டி மீனவ வாடிகளை விடத்தல்தீவு மீனவர்கள் பலாத்காரமாக பிடித்துள்ளதையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையில் உருவான கலவரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் பலர் காயங்களுடன் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு வாழும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்களின் காணிகளை அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கக் கோரியும் , அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்குமாறு கோரியும் இன்று ஜும்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி-05 ஜாமியுழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
 












 

1 comment:

  1. அடுத்த முஸ்லிம்களின் துன்பத்தில் அக்கறை கொண்ட உங்கள் அனைவருக்கும்
    அல்லாஹ் அருள் புரிவானாக.
    உங்கள் துன்பங்களை நீக்கி வைப்பானாக.

    ReplyDelete

Powered by Blogger.