பௌத்த குருமாரிடையே முரண்பாடு - காலியில் பெரும் சண்டை (வீடியோ இணைப்பு)
பௌத்தம் பற்றிய மாற்றுக் கருத்துடைய பிக்கு ஒருவர் பெளத்த பிக்குகள் தலைமையிலான அடிப்படைவாதிகள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலியில் உள்ள பத்தேகம நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது.
புதிய பௌத்த சித்தாந்த உபதேசத்துக்காக பத்தேகமவுக்கு சென்றபோதே பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற பௌத்த அடிப்படைவாதிகளால் இவர் தாக்கப்பட்டுள்ளார். இவருடன் கூடச் சென்ற பாதுகாவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
முன்னர் வண.பிரிதுவ சிறி தம்ம தேரோ என்று அழைக்கப்பட்டவரும் தற்போது சிறி சம்தபத்ர என்று அழைக்கப்படுபவருமான பெல்லந்தோட்ட சிறிசாந்தகம் ஆசிரமத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குவே தாக்கப்பட்டுள்ளார்.
இவர் பௌத்த போதனைகளுக்கு முரணான வகையில், புதிய சிந்தனைகளை பரப்பி வருவதால் சர்ச்சைகளுக்காகியுள்ளார்.
காலியில் மாற்றுச்சிந்தனை கொண்ட மற்றொரு பௌத்த நிலையம் பௌத்த அடிப்படைவாதிகளால் சில நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டதும், அதனை அகற்றுவதற்கு அரசுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment