Header Ads



இந்து சமுத்திரத்தில் பூமியதிர்ச்சி - இலங்கைக்கு பாதிப்பு இல்லையாம்


TM

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தென்மேற்கிலுள்ள மொரிஷியஸ் தீவுக்கருகில் இன்று வியாழக்கிழமை 5.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

20.5 மைல் ஆழத்தில் கடலுக்கு அடியில் இப்பூமியதிர்வு ஏற்பட்டது.  இந்தோனேஷியாவின் அஷே மாகாணத்தில் 6.4 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஏற்பட்டது.  இதன்போது ஒருவர் தனது வீட்டை விட்டு வேகமாக ஓடியபோது விழுந்து  உயிரிழந்துள்ளார். ஏனைய சேத விபரங்கள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. 

1 comment:

  1. அச்சத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் நம்மைக் காத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete

Powered by Blogger.