மன்னாரில் சிறையிலுள்ள முஸ்லிம்களை விடுவிக்க உதவுமாறு ஹக்கீமிடம் கோரிக்கை
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார். மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அந்தப்பகுதி மீனவ மக்களையும், ஏனையோரையும் அவர் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பின்போது கலகத்தில் ஈடுபடடவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீதித்துறையின் சுயாதீனமும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால், நீதிஅமைச்சர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற ரீதியில் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அரசியல்வாதி என்ற வகையிலும் கோந்தைப்பிட்டி கடலுரிமை தொடர்பான பிரச்சினையையும், அதனோடு தொடர்புபட்ட விடயங்களையும் மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியிருப்பதாக மக்களுக்கு எடுத்துரைத்ததாக அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் பிபிசி யிடம் கூறினார்.
சர்ச்சைக்குரிய கோந்தைப்பிட்டி மீன்பிடி துறைக்கும் சென்று அமைச்சர் பார்வையிட்டுள்ளார். எனினும், நீதிமன்றத்தரப்பினரையோ, அரச அதிகாரிகளையோ இன்று தான் சந்திக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தலையைக் காட்டாமல் விட்டால் இருக்கின்ற அற்ப சொற்ப வாக்குகளும் இல்லாமல் பொய் விடும் என்று போயிருப்பாரோ?
ReplyDeleteபொது மக்களிச் சுடச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக் நடவடிக்கை எடுக்க வக்கில்லை, இவர் நீதி அமைச்சராக இருந்து என்ன பயன்?
மன்னார் தமிழ் சட்டத்தரணிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வருகைக்காக சனிக்கிழமை நிதீ மன்ற வளாகத்தில் கூடி நின்றனராம்,அமைச்சர் அவர்களை சந்திக்கவில்லையாம் சந்தித்திருந்தால் இனவாதத்தை கக்கி இருப்பார்கள் என்பது தலைவருக்கு தெரியாத பின்னே,அமைச்சர் வந்தது லீவு நாளில் என்பது கூட கருப்பு கோட்டுக்கு தெரியாது ...பாவம் தலைவர் அவர்களே தமழழோசையில் தங்களது பேட்டி கேட்டேன் அதனை அப்படியு மெயின் டெயின் பண்ணுங்க..
ReplyDeleteஅன்பின் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு....
ReplyDeleteஅனுதாபம் கோறி எழுதும் அன்புள்ள மடல் இது..
அஸ்ஸலாமு அலைக்கும், சிறையில் வாழும் மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் நாளை ஆஜராகும் 30 பேர் இவர்கள் குறித்து நீதி அமைச்சர என்ற வகையில் நீங்கள் கவம் செலுத்த தவறினீர்கள் என்றால் அல்லாவுக்கு பதில் சொல்லும் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் கிறீஸ் மனிதன் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் இன்னும் கைதிகளாகத்தான் இருக்கின்றார்கள்.அவர்களது உறவுகள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல,செய்யாத குற்றத்துக்கு தடுப்புக்காவலில் வைக்கப்படுவது என்ன நியாயம்,நீங்கள் ஒரு முஸ்லிம் உங்களது சட்டம் அல்-குர்ஆன்,அல்-ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும்.இலங்கை சட்டம் மதிக்கப்பட வேண்டும்,அதனை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.ஆனால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை அது வண்மையாக கண்டிக்கின்றது என்பதும் உங்களுக்கும் தெரியாதவைகளல்ல,
அண்மையில் மன்னாருக்கு சென்று வந்துள்ளீர்கள் உண்மையினை அறிந்துள்ளீர்கள்,எனவே உடடினயாக இன்றே காரியத்தில் இறங்குங்கள் பதவி பறி போவதற்கு முன்னர் நியாயத்ததுக்காக போரடிய வரலாற்றுப் பதிவில் உங்கள் நாமம் பொறிக்கப்படும்,நோன்பு காலத்தில் கேட்கப்படும் துஆக்கள் அங்கீகரிக்கப்படும்.
இன்று திங்கட்கிழமை இன்னும் 30 பேரை மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.நீதி மன்றக்கட்டிடம் இன்னும் உத்தியோகபூர்வமாக இயங்காத் நிலையில் அதனை தாக்கியதாக 40 பேர் கைது செய்யப்படுவது இலங்கை சட்ட வரலாற்றில் புதுமை ,இது நீதியுமல்ல...
இன்று யார் இவர்கள் ஆஜர் செய்யப்படப் போகின்றார்கள் என்பதை நீங்கள் உடனடியாக பாருங்கள்,இவர்கள் குறித்தும் நீங்கள் பார்க்க வேண்டியுள்ளது.முஸ்லிம் என்றால் கைது செய்யப்பட வேண்டியவன் என்ற நிலை மன்னாரில் மாறிவிட்டது.கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் நிகரில் வியாபாரம் செய்த காத்தான்குடி சகோதரர்கள் இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்....இதிலிருந்து நீதி தேவதையின் தகுதி புரிகறிது தானே,இந்த நிலை தொடரும் எனில் ஏன் நீங்கள் நீதி அமைச்சராக இருக்க வேண்டும்.........காலம் தாழ்த்தி எடுக்கப்படும் தீர்மானம் பிரயோசனம் அற்றதாகவே இருக்கும்.....அரச எதிரப்பு வீ..........,தினக்...........மெட்.............. சக்.......... போன்ற ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தை படுமோசமாக இழிவு படுத்திவருகின்றது.அப்பத்திரிகைகள் தமிழ் இனததுக்கு பெரும் அழிவுகளை செய்த ஜே.வி....... கட்சிகளின் செய்திகளுக்கு முன்னுரிமையளிதது முஸ்லிம்களையும்,சிங்களவர்களையும் மோதவிட்டு பயங்கரவாதிகளின் ஆ்ட்சியினை கொண்டுவர பாரக்கின்றார்கள்,
அன்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிிகழ்வுகளை தமது வீ... பத்திரிகையில் பிரசுரித்து புலிகளுக்கு தகவல் சொல்லியவர்கள் அவர்களே...இது இந்த விடயங்கள் வெகுவிரைவில் அம்பலமாகும்.அது ஒரு புறம் இருக்கட்டும் இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாருடை ஆதரவாளர்கள் என்பது முக்கியமல்ல,எதுவும் செய்யாமல் புலிகளினால் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினை,விடுதலைப் புலிகளின் மகளிர் அணியில் இருநத கவுசியை தெரியுமா உங்களுக்கு,வேறு யாருமல்ல தற்போதைய மன்னார் ......தங்கை..இன்னும் இருக்கின்றது....
அவ்வப்போது தருகின்றோம்..........