Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு அமீர் அலியின் பெயர் சிபார்சு

TV

அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் அரச உயர் தலைமையிடம் கிழக்கு மாகாண முதலமைச்சராக தனது பெயரை சிபார்சு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்ககு   எனது பெயரை சிபாரிசு செய்துள்ளனர். கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் என்ற வகையிலும் இன, மத, பேதமின்றி நான் மக்கள் பணியாற்றுவதில் எமது கட்சி தலைமை திருப்தி கண்டதனாலே எனது பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகக் கருதுகின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சமநிலையைப் பேணக்கூடியவராகவும் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். அந்தப் பணியை செவ்வனே செய்யும் திறமையும், ஆளுமையும் எனக்குண்டு என கருதுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஓட்டமாவடியில் விசாரித்தால் இவரின் சேவையின் அழகும் மக்கள் தொடர்பும் புரியும்

    ReplyDelete
  2. மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவே வரமுடியவில்லை.. அதற்குள் மாகாண முதலமைச்சராம்..

    ReplyDelete

Powered by Blogger.