Header Ads



பிரான்ஸ் போர் கப்பல் இலங்கை வந்தது

TM

பிரெஞ்சு கடற்படை கப்பலான 'டுபே டி லோம்', நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறைகத்திற்கு இத்தகைய விஜயமொன்றை பிரெஞ்சு கடற்படை கப்பலொன்று வந்தமை இதுவேமுதல் தடவை என இலங்கை கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை குறிக்கும்முகமாக இக்கப்பலின் கட்டளைத் தளபதி கமாண்டர் கிறகோல்வ் ஜேர்மைன், இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்டைன் ரொசோன் சகிதம் கிழக்குமாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவை சந்தித்து கலந்துரையாடினர்.

 102 அடி நீமான டுபே டி லோம் கப்பலில் 11 அதிகாரிகள் உட்பட 102 கடற்படை வீரர்கள் உள்ளனர். இக்கப்பல் ஜூலை 6 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்துநிற்கும்.


No comments

Powered by Blogger.