Header Ads



நான் தப்பு செய்திருந்தால் என்னை தூக்கில் போடுங்கள் - நரேந்திர மோடி


கோத்ராவில் நடந்த கலவரத்தில் நான் தப்பு செய்து இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் என குஜராத் முதல்வர நரேந்திர மோடி ஆவேசமாக கூறியுள்ளார். உருது நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நான் தவறு எதுவும் செய்யாதபோது எவ்வாறு மன்னிப்பு கேட்க முடியும் ? என்று கூறியுள்ளார். லக்னோவிலிருந்து வெளிவரும் உருது நாளிதழான Nai Duniya விற்கு பேட்டியளித்த மோடி, தான் தவறு ஏதும் இழைத்து இருந்தால் தூக்கு தண்டனை தான் அதற்கு தீர்வாக இருக்க முடியும், இத்தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்றும், மறுபடியும் இது போன்ற தவறுகள் நடபெறமால் இருக்க இவ்வகையான தண்டனை எச்சரியாக அமையும் எனறார்.

மோடியிடம் பேட்டி கண்ட நாளிதழின் ஆசிரியர் சாஹித சித்தீக், சமாஜ்வாதி கட்சியின் பாராளுமண்ற உறுப்பினராவார்.  ஏன் நீங்கள் நாட்டு மக்களிடம் கோத்ரா கலவரம் குறித்து மன்னிப்பு கேட்க கூடாது என்ற கேள்விக்கு மேற்கண்டாவாறு பதிலளித்த மோடி, என்னை மோசமாக சித்தரித்துவரும் மீடியாக்கள் தான் தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்றார். உட்கட்சி மோதலால் குழப்பத்தில் இருக்கும் மோடிக்கு, அதிருப்தியாளர்கள் குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தலைமையில் பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறார்கள். மேலும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் படேல் வாக்குகளை கேசுபாய் பிரித்து விடுவார் என்பதால், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப மோடி முஸ்லிம் ஓட்டுகளை கவர இது மாதிரியான பேட்டிகளை கொடுத்து வருகிறார் என கருத்து ஏற்பட்டுள்ளது.

 

1 comment:

  1. இந்தப் புகைப்படம், இவன் எவ்வளவு கொடியவன், இரத்த வெறி பிடித்தவன் என்பதை காட்டவே பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.