பர்தா அணிவதற்கு மறுத்தால் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறுவோம் - சவூதி அரேபியா
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா வீரர்-வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இதில் மகளிர் ஜூடோ போட்டியில் மோதும் சவுதி வீராங்கனைகள் முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து லண்டனில் நேற்று முன்தினம் சர்வதேச ஜூடோ பெடரேஷன் ஆலோசனை கூட்டம் தலைவர் மரியஸ் வியெர் தலைமையில் நடந்தது. அதில் பர்தா அணிவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜூடோ வீராங்கனை தனது தலையில் முககவசம் போல் உடை அணிந்து மோதுவது கடினம். மேலும் அது பாதுகாப்பானதும் அல்ல, ஜூடோ போட்டி முறைக்கு எதிரானது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. ஜூடோ போட்டியில் வீராங்கனைகள் மோதிக் கொள்ளும் போது தலையை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தால் ஆபத்து விளைவிக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சவுதி ஆரேபியா பிரதிநிதி கூறுகையில்:
இதையடுத்து லண்டனில் நேற்று முன்தினம் சர்வதேச ஜூடோ பெடரேஷன் ஆலோசனை கூட்டம் தலைவர் மரியஸ் வியெர் தலைமையில் நடந்தது. அதில் பர்தா அணிவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜூடோ வீராங்கனை தனது தலையில் முககவசம் போல் உடை அணிந்து மோதுவது கடினம். மேலும் அது பாதுகாப்பானதும் அல்ல, ஜூடோ போட்டி முறைக்கு எதிரானது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. ஜூடோ போட்டியில் வீராங்கனைகள் மோதிக் கொள்ளும் போது தலையை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தால் ஆபத்து விளைவிக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சவுதி ஆரேபியா பிரதிநிதி கூறுகையில்:
எங்கள் நாட்டு வழக்கப்படி தலையில் பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆசிய ஜூடோ பெடரேசன் அமைப்பானது முஸ்லிம் பெண்கள் தலையில் பர்தா அணிய அனுமதித்துள்ளது. எனவே சர்வதேச ஜூடோ பெடரேசனும் அனுமதிக்க வேண்டும். அனுமதி மறுத்தால் ஒலிம்பிக் போட்டியையே புறக்கணிப்போம் என்று சவுதிஅரேபியா மிரட்டல் விடுத்துள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் எந்த முஸ்லிம் நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்குபற்றக் கூடாது.
ReplyDeleteரமலான் மாதத்திலே நமது சகோதரிகளுக்கு ஒரு விளையாட்டு.
இபாதத்திலே கழிக்கவேண்டிய நமது சகோதரிகளின் இழிநிலை.
திலாவத்துகளிலே ஈடுபட வேண்டியவர்களுக்கு, நமக்கு ஒரு வீண் விளையாட்டு.
யஹூதி நசாராக்களின் கூத்துகளிலிருந்து, நமது சகோதர, சகோதரிகள் எப்போதும் விலகி இருப்பது நல்லது.
ஐரோப்பாவில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் டிவியில்கூட, ஒலிம்பிக் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை.
மியான்மரில் நமது உம்மாவின் கொலைக்களம், பாலஸ்தீனிலே நமது உம்மாவின் சாப்பாட்டுக்குப் படும் பாடு, சிரியாவில் நமது உம்மாவின் அவலம், காஷ்மீரில் தினம் தினம் நடக்கும் கொலைக்களம் போன்றவைகள் நமது முஸ்லிம் ஆட்சியாளருக்கும் முஸ்லிம்களுக்கும் அவல் சாப்பிடுவதுபோல.
இவைகளெல்லாம் மறந்து, ரமலானையும் மறந்து, எந்த ஷைத்தானோ உருவாக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வது, நமக்குத் தேவைதானா?
நமது சவூதி சகோதரிகள், இந்த ஒலிம்பிக் கேளிக்கை நிகழ்ச்சிகளை பகிஷ்கரித்துவிட்டு, நாட்டுக்குத் திரும்பிச் செல்வது மிகவும் நல்லது.
இப்படிப் பகிஷ்கரிப்பதால், சவூதி நாட்டுக்கு எந்தவித நட்டமும் இல்லை.
சகோதரர் யூஸுப் இன் கருத்து வரவேற்கத்தக்கது.
ReplyDeleteits true should avoid
ReplyDeleteஅவர்கள் எதை பாவித்து நம்மை குத்துகிரார்களோ, அதை பாவித்து தான் நாம் குத்த வேண்டும். எங்கோ இருக்கும் முஸ்லிம் உம்மத்துக்கு ஏதோ நடக்குறது என்று வெறும் வீர வசனம் பேசும் நீங்கள் உங்களை தொழிலை விட்டு அங்கு பொய் உம்மத்துக்கு உதவி செய்யலாமே. வெறும் வார்த்தைகளால் ஒர்ய்வருடைய திறமையை முடக்க முடியும் ஆனால் முஹம்மது ரசூல் ஸல் அவர்கள் எவன் திறமையை வைத்துக்கொண்டு அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறானோ அவன் என்னை சார்ந்தவர் அல்ல என்று கூறி இருக்கிறார்கள். சும்மா கதைப்பதைவிட்டு கையேந்தி பிரார்த்தியுங்கள். ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி ஒன்று நடப்பது மாதக்கு 2500 பேர் இஸ்லாத்தை தழுவும் நாட்டில் இதுதான் முதல் தரம். இஸ்லாம் பரவ வழிவிடுங்கள் நண்பர்களே
ReplyDeleteIslam not say sports haram for womens but its best way avoid unnecessary sports events.This saudi ladies make difficults all for us.
ReplyDeleteSeinudeen marikar isham marikar வெறும் வீர வசனம் பேசும் ஒருவரல்ல, தனது வார்த்தைகளை தானே உண்மைப் படுத்தும் முகமாக தனது தொழிலை விட்டு விட்டு தற்பொழுது பர்மாவிலோ, சிரியாவிலோ இருந்து சிரமத்துக்கு மத்தியில் இங்கே கமெண்ட் பண்ணியுள்ளார் என்று நம்புகின்றேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
எவன் ஒருவன் எனது பெயரால் இட்டுக் கட்டுகிறானோ, அவன் தனது ஒதுங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று முஹம்மது ரசூலுல்லாஹ் எச்சரித்துள்ளார்கள்.
ReplyDelete''எவன் ஒருவன் திறமையை வைத்துக் கொண்டு அதனை வெளிப்படுத்தாமல் இருக்கின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல'' என்ற ஹதீஸ் எங்கே வருகின்றது, அதன் சரியான மொழிபெயர்ப்பு என்ன, அதற்கான விளக்கம் என்ன, அது முஸ்லிம் பெண்கள் ஒலிம்பிக்கில் ஜூடோ சண்டை போட எப்படி ஊக்குவிப்பதாக அமையும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதற்காக சகோதரர் Seinudeen marikar isham marikar அவர்கள் ஹதீஸ் குறித்து பூரண விபரத்தையும் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
சகோதரர் Yusuf Ismath அவர்களின் கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன்.
ReplyDeleteஒலிம்பிக் என்பது, கிரேக்கர்களின் இணைவைப்புத் தெய்வங்களுக்கு விழா எடுப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒரு மதச் சடங்கு. இதனை அவர்கள் கூறும் தெய்வங்களான ஹரக்லசும் செயசும் ஆரம்பித்து வைத்ததாக கூறுகின்றனர். ஆரம்பத்தில் இந்நிகழ்வில் பங்கு பற்றியவர்கள் நிர்வாணமாகத்தான் போட்டிகளில் பங்கு பற்றினார்களாம்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்களில் கிரேக்க பெண் தெய்வம் என்று அவர்கள் கூறும் நைகேயின் இறக்கைகளுடன் கூடிய அரை நிர்வாண உருவம் பதிக்கப் பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் இதனை வாங்கி கழுத்தில் பெருமையாக அணிந்து கொள்ள முடியுமா?
இணை வைப்புத் தெய்வங்களுக்காக உருவாக்கப் பட்ட மத நிகழ்வு வழி வந்த நிகழ்வில், அல்லாஹ்வை மட்டும் ரப்பாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் பங்குபற்ற முடியுமா? அரை நிர்வாண இணை வைப்புக் கடவளின் உருவத்தை வாங்கி கழுத்தில் மாட்டிக் கொள்ள முடியுமா?
காபிர்கள் செய்வதையெல்லாம் முஸ்லிமும் செய்துதான் ஆக வேண்டுமா?
அருமையாக சொன்னீர்கள்.Seinudeen marikar isham marikar
ReplyDelete@seinudeen marikar isham marikar.....thanazu thiramaiyai welikkattuwadu kattayam than.but yusuf sonnazu pondru thiramai ibadath halukku idaiyooraha irundal azu warawetkath thakkazu alla...
ReplyDeleteஆப்கானிஸ்தானில் எமது சகோதர, சகோதரிகள், சிறுவர், குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று ஒழிக்கும் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் இராணுவ வெறியர்களை ஒலிம்பிக் நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்காக ஆப்கானிலிருந்து திருப்பி அழைத்துள்ளது., பிரிட்டிஷ் அரசு.
ReplyDeleteஇந்த வெறியர்களின் பாதுகாப்பில் நமது சகோதர, சகோதரிகள் என்ன மனம்கொண்டு, ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் பங்குகொள்கிறார்கள்?