Header Ads



கண் இமைக்கும் நேரத்தில் இன்டர்நெட்..!

கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வீடியோ மற்றும் படங்கள் பிரவுஸ் ஆகக்கூடிய பைபர் என்ற இணைய தள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நொடிக்கு 1 ஜிகாபைட் வேகத்தில் இணைய தளங்களை பார்க்க முடியும்.அமெரிக்காவின் மிசவுரி மாநிலம் கன்சாஸ் நகரில் இந்த சேவை முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்போது பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிராட்பேண்ட் வேகத்தைவிட இது 100 மடங்கு அதிக வேகத்தில் செயல்படும்.

அதாவது, நியூயார்க்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அரை மணி நேரத்தில் காரை ஓட்டும் வேகம் இது.மூன்று கட்டண திட்டங்களில் இந்த சேவையை அளிக்கும் கூகுள், இன்டர்நெட் மட்டுமின்றி கேபிள் சேனல்களை எச்டி தொழில்நுட்பத்தில் பார்க்கும் வசதியும் அளிக்கிறது. இந்த இணைப்பு பெறுபவர்களின் கம்ப்யூட்டர் திரையில் இணைய தளங்களின் வீடியோவை கிளிக் செய்தால் கண் இமைக்கும் நேரத்தில் வீடியோ அப்லோடு ஆகிவிடும். பைல்களையும் இதே வேகத்தில் பரிமாறிக் கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.