Header Ads



முஸ்லிம் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் றிசாத் சூளுரை

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சரை தமது கட்சி விட்டுக்கொடுக்காது என அமைச்சர் றிசாத் பதியுதீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அம்மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. நாங்களும் தேர்தலில் போட்டியிடுவோம். இதுகுறித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். கடந்தமுறை தேர்தலில் நாம் சில விட்டுக்கொடுப்புகளை செய்திருந்தோம்.

இருந்தபோதும் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சரை வென்றெடுக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். இம்முறை முஸ்லிம் முதலமைச்சரை வென்றெடுப்பதில் விட்டுக்கொடுப்ப கிடையாது.

முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்திற்கு அத்தனை அழுத்தங்களையும் பிரயோகிப்போம். இதுகுறித்த சிறந்த உபாயங்களையும் வகுத்து செயற்படுவோம். இதுதொடர்பில் ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவும் நாம் தயாராகவிருக்கிறோம் எனவும் அமைச்சர் றிசாத் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. அமைச்சர் ரிசாத் அவர்களே!வடக்கில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சனையை பாருங்கள்,கிழக்கு பிரச்சனையை அங்கு உள்ள முஸ்லிம்கள் பார்த்துகொள்வார்கள்....../////////

    ReplyDelete
  2. Rishad Pls Joined with SLMC in the name of Allah. Dont Divide Muslim Nation.

    ReplyDelete
  3. முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக ஒன்றுசேர்ந்து ஒரு தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிட்டு அதிக ஆசனங்களை பெறுவதன் மூலம் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெற்று கிழக்கில் சிறந்த நடுநிலையான ஆட்சி அமைத்து சமாதானத்துக்கும், சமத்துவத்துக்கும் வழி கோல வேண்டும் என அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.......

    ReplyDelete
  4. நீங்க எந்த முஸ்லிம் கட்சியுடன் பேச்சு நடத்தப்போரீங்க?இஹ்வானுல் முஸ்லிமீன் கட்சியுடனா? பயங்கர நகைச்சுவை அமைச்சர்பா நீங்க.

    Mubharrakk

    ReplyDelete
  5. முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக ஒன்றுசேர்ந்து ஒரு தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிட்டு அதிக ஆசனங்களை பெறுவதன் மூலம் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெற்று கிழக்கில் சிறந்த நடுநிலையான ஆட்சி அமைத்து சமாதானத்துக்கும், சமத்துவத்துக்கும் வழி கோல வேண்டும் என அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.......

    ReplyDelete
  6. rezamohideen


    my dearest brotherz nvr understnd the real fact.unity cd b reached only throough islamic nabivali politcs n true islamic politcns.slmc is baesd on shareeah bt only to cheat the socty.plz undrstnd the truth,asthahfrullah

    ReplyDelete

Powered by Blogger.