ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியதும் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் வெளியாகும்
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வெளிநாடு சென்றுள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியதும், இதுகுறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொருளாளரும், எம்.பி. யுமான அஸ்லம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கூட்டணியாக போட்டியிடுவதாயின், முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதுகுறித்துகட்சித் தலைமை ஜனாதிபதியுடன் அடுத்த சில நாட்கள் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அஸ்லம் எம்.பி தெரிவித்தார்.

Post a Comment