இலங்கை ஊழியர்களைச் சேர்க்க 9 ஓமான் நிறுவனங்களுக்குத் தடை
ஓமானிலுள்ள 9 நிறுவனங்கள் இலங்கையர்களை ஊழியர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் தடைவிதித்துள்ளது. இலங்கை ஊழியர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் காரணமாக இந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 14 நிறுவனங்களுடனான செயற்பாடுகளை இலங்கைத் தூதரகம் நிறுத்திக் கொண்டுள்ளது.கறுப்புப் பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் 7 ஆடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் அடங்கும். அத்துடன் 3 ஆடைத்தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 4 ஆள்சேர்ப்பு நிறுவனங்கள், 3 சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மேலும் 4 நிறுவனங்களுடனான தனது செயற்பாடுகளை, ஓமான் தொழிலாளர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் காரணமாக இலங்கைத் தூதரகம் நிறுத்தியுள்ளது.
ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காமை, ஊழியர்களை ஒழுங்கீனமாக நடத்துதல், சம்பளம் குறைக்கப்பட்டமை போன்ற பல முறைப்பாடுகள் இந்த நிறுவனங்களுக்கு எதிராக தெரிவிக்கப் பட்டுள்ளதாக இலங்கைத் தூதுவர் அசோக கிரிஹகம கூறினார்.
இந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இருக்கும் காலத்தில் இலங்கை ஊழியர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்குப் பயணம் செய்ய விஸா வழங்கப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.
துணிச்சலான நடவடிக்கை. இலங்கையர்கள் தொழில் புரியும் எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் மேற்படி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ReplyDeleteஅதே நேரம் தொழிலாளர் வழங்கல் நிறுவனங்கள் (Labour Supplying Companies) மூலம் மேற்படி கறுப்புப் பட்டியல் நிறுவனங்கள் இலங்கைத் தொழிலாளர்களை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.