Header Ads



நாட்டில் வாய்ப்புற்று நோய் அதிகரிப்பு - வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு



நாட்டில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வாய்ப்புற்று நோயினால் பாதிக்கப்க்கப்படுவதாக சுகாதாரக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தினசரி இருவர் வீதம் உயிரிழப்பதாகவும் இந் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைத்தல், போதைப்பொருள் பாவனை, வெற்றிலைப் பாவணை போன்ற காரணங்களினாலேயே இந்த வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நோயிக்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இந்நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என சுகாதார கல்விப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது
 

No comments

Powered by Blogger.