றிசாத் பதியுதீனுக்கு எதிராக வாதாட 7 சட்டத்தரணிகள்..! முஸ்லிம் சட்டத்தரணிகள்..??
மன்னார் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றசாட்டின் கீழ், அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் சார்பில் முன்னிலைப்பட, ஏழு சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்.
பிரபல சட்டத்தரணிகளான விஜயதாச ராஜபக்ஸ, அருள் பிரகாசம், வெலியமுன, ரொமேஸ் டீ.சில்வா உள்ளிட்ட இன்னும் சில சட்டத்தரணிகளே இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதினுக்கு எதிராக வாதாடுவதற்கு தயாராகியுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரும் இந்த மனுவின் சார்வில் முன்னிலையாகவுள்ளனர். அத்துடன் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்திய குற்றத்துக்காக, அமைச்சர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கையிலுள்ள முஸ்லிம் சட்டத்தரணிகளில் அநேகர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஆதரவாக முஸ்லிம் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வாதாடுவார்களா? அல்லது ஆலேசனை வழங்குவார்களா?? என்பதிலும் சில தரப்பினர் சந்தேகங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் சில முஸ்லிம் சட்டத்தரணிகள் முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி அமைச்சர் றிசாத் பதீயுதீன் செயற்படுவதாலும், மன்னார் விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் சட்ட ஆலோசனைகளை வழங்க தயாராகிவருதாக அறியவருகிறது.

இந்த ஏழில் இரண்டு பேர் முஸ்லிம்கள். அவலை (அமைச்சர் ரிஷாத் ஐ ) நினைத்து உரலை (வட மாகாண முஸ்லிம்களை ) இடிக்க புறப்பட்ட தர்மவான்கள்
ReplyDeleteயா அல்லாஹ் வட மாகாண முஸ்லிம்களை காப்பாற்று.
யார் அந்த இரண்டு சமூகத் துரோகிகளும்?
ReplyDelete