Header Ads



மாதம்தோறும் 60 சிங்கள குடும்பங்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படுகிறதாம்..!



முஸ்லிம் தீவிரவாதமே எமக்கு சவால். ஒவ்வொரு மாதமும் 60 க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படுவதாகவும் இதற்கான அத்தாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும் பௌத்த செயல் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று தமிழர்கள் அன்றி முஸ்லிம் தீவிரவாதமே எமக்கு சவாலாக உள்ளது. பன்சலைகள் 900 க்கும் குறைவாக போய்விட்டன. பௌத்தர்களின் விகிதாசாரம் 9 சதவீதம் குறைந்துள்ளது. தர்ம போதனை (தஹம்) பாடசாலைக்குச் செல்லும் மாணவர் தொகையும் குறைந்துள்ளது.

தேரர்களே நாங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பிள்ளைகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.

தேரர்களே நாங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பிள்ளைகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். பௌத்த செயல் முன்னணி எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் கலந்துரையாடலுக்கான ஆரம்பம் என்ற மாநாட்டை நடாத்தவுள்ளது.

இதுவரை பேச்சுவார்த்தை நடாத்தியது போதும். பொறுமை காத்தது போதும். மேலும் காலம் காலத்தை தாழ்த்திக் கொண்டிருக்காது நாம் எமது அமைப்பின் பலத்தை மேலும் அதிகிரித்துக்கொள்ள வேண்டும். கட்சி, நிறம், மற்றும் அரசியலுக்குள் சிக்குண்டு இதனை எம்மால் முன்னெடுக்க முடியாது. கட்சி அரசியல் காரணமாக நாம் வேறுபட்டுள்ளோம். முதுகினை உடைத்துக் கொண்டோம். எமது ஆலோசனைகளை செவிமடுக்காத ஆட்சியாளர்கள் உருவாவதற்கு காரணமாகிவிட்டோம்.

பௌத்த தேரர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இன்றும் நாம் போராட வேண்டியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் நடாத்தவேண்டியுள்ளது. நாம் மௌனமாக இருந்தால் எதிர்காலத்தில் எமது இளம் பிக்குகள் எம்மை சபிப்பார்கள்.

இன்று ஊடகங்கள் மூலமாக எமக்கெதிரான பிரச்சாரங்களைப் பாருங்கள். பொலிஸ் உட்பட அனைத்து தரப்பும் எங்கள் கௌரவத்தை இழிவுபடுத்தும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. நாம் நினைக்கவும் முடியாத அளவுக்கு பலவித சக்திகள் பௌத்த தர்மத்தையும், பௌத்த மதப் போதகர்களையும் தவறாக சித்திகரிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளன. இன்று வேலைத்தளங்களில், தொழிற்சாலைகளில் பலவித வைபவங்களில் ஏன் திருமண வீடுகளிலும், மரணச் சடங்குகளிலும் குருமார்களைப் பற்றி பேசியே நிந்திக்கிறார்கள். நாங்கள் இவற்றை சொல்லத் தேவையில்லை. உங்களுக்கும் தெரியும்.

மகாசங்க நாயக்கர்களே..! பௌத்த தேரர்களே.. நாம் முன்பைவிடவும் பலம் வாய்ந்த சக்தியாக மாறவேண்டும். ஒன்றிணைய வேண்டும்.

கடந்த மாதம் நாம் இந்த பௌத்த செயல் முன்னணியை ஆரம்பித்துலைத்தோம். காலியில் முதலாவது ஊர்வலத்தை ஆரம்பித்தோம். இதன்மூலம் உறக்கத்திலிருந்த ஆட்சியாளர்களினதும், பௌத்தர்களினதும் கண்களை திறக்கமுடிந்தது.

நாம் கலந்துரையாடி எரிர்வரும் 28 ஆம் திகதி சில தீர்மானங்களை எடுக்கவுள்ளோம் எனவும் கிரமவிமல ஜோதி மற்றும் கலபொட அத்தே ஞான தேரர் ஆகியோர் கையொப்பமிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.