முதூரில் நீரில் மூழ்கி 3 முஸ்லிம் இளைஞர்கள் வபாத்
மூதூர் கொட்டியாரக்குடாக் கடல் களப்பில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 முஸ்லிம் இளைஞர்களின் ஜனாஸாக்களும் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 அளவில் குறித்த மூவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட நீர்ச்சுழியில் அகப்பட்டு நிரில் மூழ்கியுள்ளனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 17, 18 மற்றும் 28 வயதான மூவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
வபாத்தான ஒருவர் மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த முகம்மது ஜுனைத் ஸஹி (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Post a Comment