Header Ads



என்னை கொலைசெய்து விடுவார்கள் என்று பயமாக உள்ளது - ஹொஸ்னி முபாரக் கதறுகிறார்



‘சிறை மருத்துவமனையில் அறிமுகம் இல்லாத டாக்டர்கள் வலம் வருகிறார்கள். அவர்கள் கொலை செய்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது’ என எகிப்து மாஜி அதிபர் ஹோஸ்னி முபாரக் சொல்லி வருகிறார். எகிப்தின் சர்வாதிகார அதிபராக 1981 முதல் 2011 வரை இருந்தவர் ஹோஸ்னி முபாரக் (84). கடந்த ஆண்டில் மக்கள் புரட்சி வெடித்ததை அடுத்து, பதவி விலகினார். ஊழல், அதிகார துஷ்பிரயோக வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. முன்னாள் அதிபர் அன்வர் சதாத் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

டோரா என்ற இடத்தில் உள்ள சிறையில் கடந்த ஜூன் மாதம் அடைக்கப்பட்டார். அப்போதிருந்தே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், முபாரக் பற்றி அவரது வக்கீல் பரீத் எல் டீப், டிவியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறையில் அடைத்ததில் இருந்தே அவருக்கு அதிக ரத்த அழுத்தம், மூச்சு திணறல், மன அழுத்தம் இருந்தது. நாடித் துடிப்பும் குறைந்ததால் டீபிப்ரிலேட்டர் கருவியை சிறை டாக்டர்கள் 2 முறை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், அதிக வசதிகள் நிறைந்த ராணுவ ஆஸ்பத்திரிக்கு அவரை மாற்ற அதிகாரிகள் மறுக்கின்றனர். ‘டாக்டர்கள் எல்லாரும் புதிது புதிதாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. கொலை செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. என்னை கொல்வதற்காகவே இவர்களை அனுப்பியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. காப்பாற்றுங்கள் பரீத்’ என்று முபாரக் பரிதாபமாக கெஞ்சுகிறார், கதறுகிறார். இவ்வாறு பரீத் கூறியுள்ளார்.



1 comment:

  1. قل اللهم ملك الملك ,تؤتي الملك من تشاء وتنزع الملك ممن

    تشاء.وتعز .من تشاء وتذل من تشاء بيدك الخير. إنك على كل شيئ قدير
    سورةال عمران

    ReplyDelete

Powered by Blogger.