சாதி குறைந்தவர் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக மூக்கு வெட்டப்பட்ட கொடூரம்
மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக தலித் இளைஞரின் மூக்கை உயர்ஜாதி வெறியர்கள் துண்டித்த சம்பவம் பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
முப்பத்தியொரு வயதான பிரகாஷ் ஜாதவ் என்ற இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளான். தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஜாதவிற்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தகுதியில்லை என்று கூறி அக்கிராமத்தில் உயர்சாதி கும்பல் ஒன்று ஜாதவின் மூக்கை துண்டித்துள்ளனர்.
குஷ்வாஹா சாதியைச் சார்ந்தவர்கள் இந்த மிருக வெறித்தனமான செயலை செய்துள்ளனர். ஜாதவை கடுமையாக தாக்கிய பிறகு கத்தியால் அவரது மூக்கைத் துண்டித்து வீசியெறிந்துள்ளனர். ஜாதவ் உதவிக்கேட்டு குரல் கொடுத்த பிறகு இச்சம்பவத்தை வேடிக்கைப் பார்த்தவர்கள் அவருக்கு உதவ முன்வரவில்லை.
ரத்தம் பீறிட்ட ஜாதவை கண்ட அவ்வழியே சென்றவர்கள், அவரது வீட்டிற்கு தகவலை கொடுத்துவிட்டு கவலைக்கிடமான நிலையில் ஜாதவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு காரணமான உயர் சாதிக் கும்பலைச் சார்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்பது பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Post a Comment