Header Ads



கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை மட்டும் அரசாங்கம் நிறுத்தும் என்று கூறமுடியாது

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக அரச தரப்பிலிருந்து இதுவரை எவரையும் முன்நிறுத்தவில்லையென அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரெம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

கிழக்கு மாகாண வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்போது முதலமைச்சர் பதவிக்கு ஒருவருடைய பெயரை அரசு முன்மொழியும். ஆனால் இதுவரை யாரையும் அரசாங்கம் வேட்பாளராக நியமிக்கவில்லை.

கிழக்கு தேர்தல் தொடர்பாக அரசாங்கம் நீண்ட கலந்துரையாடலை மேற்கோண்டுவந்தது. அதன்படி இன்னும் இரண்டொரு வாரங்களில் மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கான திகதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

கிழக்கு மாகாண சபைக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று யாரை வேண்டுமானாலும் நிறுத்தமுடியும். ஆனால் அந்தச் சபைக்கு பொறுப்பான ஒருவரையே நியமிக்க வேண்டும் என்பது அரசின் விருப்பமாகும்.

இதில் முஸ்லிம் ஒருவரை மட்டும் அரசாங்கம் நிறுத்துமா என்று கூறமுடியாது. கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒர் சபையாக உள்ளது. உனினும் இங்கு இனமுரண்பாட்டை தவிர்க்கும் முகமாக அரசு யாரையேனும் நிறுத்தும் எனவும் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.