Header Ads



முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் தயார் இல்லையாம்

Gtn

கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 13-ஏ திருத்தம் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து, அந்த கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ள அரசாங்கம் எந்த விதத்திலும் தயாரில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புகள் நேற்று தெரிவித்துள்ளன.

2010 ஆம் ஆண்டு தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அத்துடன் இந்த கட்சி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று செயற்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் பதவியை தமக்கு வழங்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருந்த கோரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்திருந்தார். இதனை தவிர காவற்துறை அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என அந்த கட்சி கேட்டிருந்தது. எவ்வாறாயினும் எவ்வித உடன்டிக்கைகளையும் கைச்சாத்திடாத நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது என திவயின தெரிவித்துள்ளது.

1 comment:

  1. ரோசம் கெட்டதுகள்.ஏன் இப்படி தரம் தாழ்ந்து போகிறார்களோ.பதவி என்பதே போதை தானோ.வாழ்ந்தாலும்,இறந்தாலும் பேர் சொல்ல வாழவேண்டும்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.