உணவு, மருந்து சாப்பிட முபாரக் மறுப்பு - கைதிகளின் உடை அணியவும் விருப்பமில்லையாம்
எகிப்தில் முன்னாள் அதிபர் முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து போராடிய 900 பேர் கொல்லப்பட்டனர். ஆட்சி வீழ்ந்ததும் கைது செய்யப்பட்ட இவர் தலைநகர் கெய்ரோ அருகே ராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 900 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இவருடன் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- கட்லியும் ஆயுள் தண்டனை பெற்றார்.
அதைத்தொடர்ந்து முபாரக் ஹெலிகாப்டர் மூலம் கெய்ரோவில் உள்ள தோரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு சென்றதும் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு கைதிகளுக்கான உடை வழங்கப்பட்டது. ஆனால் அதை அணிய அடம் பிடித்தார். மேலும் உணவு மற்றும் மருந்து சாப்பிட மறுத்து விட்டார். இது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment