Header Ads



உலகம் முழுவதும் சுமார் 57 சதவீதத்தினர் திருட்டு சொப்ட்வேயர் பயன்படுத்துகிறார்களாம்



உலகம் முழுவதும் திருட்டு சாப்ட்வேர் பயன்பாட்டால் ஒரிஜினல் சாப்ட்வேர் துறைக்கு ஆண்டுக்கு ரூ.3.48 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக லண்டனை சேர்ந்த பிசினஸ் சாப்ட்வேர் அலையன்ஸ் (பிஎஸ்ஏ) என்ற நிறுவனம் உலகம் முழுவதும் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் பாதிக்கு மேல் போலி சாப்ட்வேர்கள். இது 2010ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2011ல் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. போலி சாப்ட்வேர் பயன்படுத்துவது பற்றி 33 நாடுகளை சேர்ந்த 15,000 பேரிடம் முதல் முறையாக தகவல் பெறபட்டது. உரிமம் பெறாத அல்லது திருட்டு சாப்ட்வேரை எவ்வளவு முறை வாங்கி பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு ‘எப்போதுமே’ என்று 5 சதவீதத்தினர் பதிலளித்தனர்.

பெரும்பாலான நேரங்களில் போலி அல்லது திருட்டு சாப்ட்வேரையே பயன்படுத்துவதாக 9 சதவீதத்தினர் கூறினர். 17 சதவீதம் பேர் தாங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் ஏறக்குறைய பாதி போலி அல்லது திருட்டு சாப்ட்வேர் என்றனர். மொத்தத்தில் 43 சதவீதம் பேர் மட்டுமே போலி சாப்ட்வேர்களை பயன்படுத்தியதே இல்லை என்று தெரிவித்தனர்.

இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 57  சதவீதத்தினர் திருட்டு மற்றும் போலி சாப்ட்வேர்களை பயன்படுத்துவது தெரிய வந்தது. இதனால், ஒரிஜினல் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.3.48 லட்சம் கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன. 2010ல் இது ரூ.3.23 லட்சம் கோடியாக இருந்தது. ஒரே ஆண்டில் 17 சதவீத இழப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.