லிபியா விமான நிலையத்தை கைப்பற்றியுள்ள அல்-அவ்பியா போராளி குழு
லிபியாவில் நடந்த பொதுமக்களின் போராட்டம் காரணமாக அதிபர் கடாபி ஆட்சி வீழ்ந்தது. அதை தொடர்ந்து புரட்சிப் படையினரால் கடாபியும் கொல்லப்பட்டார். தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது.
எனவே, அங்கு கிளர்ச்சிக் குழுக்கள் தலையெடுக்க தொடங்கி உள்ளன. நேற்று இரவு திரிபோலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'டார்மாக்' சர்வதேச விமான நிலையத்துக்கு அல்-அவ்பியா போராளிகள் சுமார் 200 பேர் வாகனங்களில் வந்து குவிந்தனர்.
பின்னர், துப்பாக்கி முனையில் அந்த விமான நிலையத்தை கைப்பற்றினர். துப்பாக்கிகளுடன் விமானங்களை முற்றுகையிட்டனர். இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
விமான நிலையத்தை கைப்பற்றிய போராளிகள் துப்பாக்கியால் சுட்டதால் பீதி அடைந்த பயணிகள் அலறியடித்தப்படி அங்குமிங்கும் ஓடினர். அதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
அல்-அவ்பியா போராளிகள் அமைப்பின் தலைவர் அபு ஒயிஷிலா அல்-ஹெப்சி என்பவரை திரிபோலி பாதுகாப்பு கமிட்டி கைது செய்தது. அவரை விமானம் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. எனவே, அவரை மீட்டு கடத்தி செல்லவே விமான நிலையத்தை போராளிகள் முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட தங்கள் தலைவரை விடுதலை செய்யும்படி போராளிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், அரசுக்கு கெடு விதித்துள்ளனர். இதற்கிடையே, ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடையும்படி அவர்களை திரிபோலி பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டனர். அதை அவர்கள் ஏற்கவில்லை. எனவே அங்கு பதட்டம் நிலவுகிறது.

சபாஷ் சரியான போட்டி.யாரங்கே இழுத்து வாருங்கள் கடாபியை கொன்றவர்களை.தங்களுக்கு தாங்களே அடிபட்டு சக வேண்டுமென்பதுதானே யஹுதி,நாசராக்களின் ஆசை.அல்லாஹ்வும் நாடியிருக்கிறான்
ReplyDeleteMeraan