Header Ads



கல்வியமைச்சர் பந்துல குணவர்த்னாவை வீட்டுக்கு அனுப்பு - ஆசிரியர் சங்கங்கள் பிடிவாதம்

அதிபர், ஆசிரியர்களின் சேவை யாப்புக்களை உரிய தரப்பினருடன் கலந்தாலோசிக்காது திருத்தங்களை மேற்கொள்ள முனைவதை ஏற்றுககொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அதிபர், ஆசிரியர் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட போதே சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பிறிதொரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க, கல்வியமைச்சர் கல்வி கட்டமைப்பிற்கு பல நெருக்கடிகளை தோற்றுவித்திருப்பதாக குறிப்பிட்டார்

இதன்படி, கல்வியமைச்சர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வியமைச்சர், பொலன்னறுவை, அநுராதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தேவையில்லை என கூறியிருந்தார்.

அவர்களுக்கு சிறிதளவு உரம், நீர், எண்ணெய் என்பன இருந்தால் போதுமானது என்றும், அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதுவே, கல்வியமைச்சரின் நோக்காக இருக்கின்றது. இது கல்வித்துறையை முழுமையாக வீழ்ச்சியடைய செய்யும்ட ஒரு கூற்றாகும்.

இவ்வாறான ஒரு அமைச்சர் கல்வியமைச்சுக்கு பொறுத்தமில்லாதவர், அவர் தொடர்ந்தும் இந்த ஆசனத்தில் இருக்கவேண்டுமா. இந்த கூற்றுக்கு அவர் பொறுப்பு கூறவேண்டும். இந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராக வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசி;ங்க, பொதுமக்களிடன் கோரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.