Header Ads



ஏ.எல். பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தம் முடிந்துவிட்டது - பரீட்சை ஆணையாளர்



நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் மீளாய்வு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜீ.புஷ்பகுமார குறிப்பிட்டார்.

சட்ட மா அதிபர் ஆலோசனையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.



No comments

Powered by Blogger.