Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்காக நடிக்கும் கருணா...!


புனித றமழானை முன்னிட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதியமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சுபராஜ் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தையொட்டி ஓத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நான் மாத்திரமன்றி மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி போன்றோரும் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். இங்கு முஸ்லிம்களின் றமழான் காலம் என்பது அவர்களது புனித நாட்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


3 comments:

  1. Good acting.

    MEEZAN

    ReplyDelete
  2. ஒரு மனிதன் தனது பழைய புலிக் கொள்கையில் இல்லாத பொழுது, அவனது கடந்த கால வாழ்க்கையை வைத்து அவனை கொச்சைப் படுத்துவது கேவலமான செயல்.
    இதனை இஸ்லாம் கற்றுத் தரவில்லை.

    அவன் என்றைக்கு தன தவறுகளை உணர்ந்து புலிகள் இயக்கத்தை விட்டு விலகி அதே புலிகளுக்கு எதிராக போராட புறப்பட்டானே,
    அவனது பழைய வாழ்க்கையை கிளறுவது கேவலமான செயல்.

    மன்னார் ஆயர் விடயத்தில் இது பொருத்தமில்லை, ஏனெனில், அவர் மனம் வருந்தவுமில்லை, திருந்தவ்மில்லை. அவர் அன்று முதல் இன்று வரை வரியில்லாத வெள்ளைப் புலியாகவே இருக்கின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.