கேகாலை வாகன விபத்தில் 30 பாடசாலை மாணவர்கள் காயம்
AD
கேகாலை - குருநாகல் பிரதான வீதியின் பட்டவங்கி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ், கார் ஒன்றுக்கு இடம்கொடுக்க முற்பட்டவேளை, பஸ் காரில் மோதி வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.40 அளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 30 பாடசாலை மாணவர்களும் காரின் சாரதியும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment