இரட்டை கொலை செய்த பௌத்த குருவுக்கு மரணதண்டனை
சீனாவின் ஜியாங்சி மாகாணத்திலுள்ள ஜியுஜியாங் பகுதியை சேர்ந்தவர் சியு சின்லியான் (39). கடந்த 1994-ம் ஆண்டு ரயில் நிலைய ஓய்வறையில் இருந்தபோது அங்கிருந்த தம்பதியினருக்கும், சின்லியானுக்கும் தகராறு ஏற்பட்டது.
அத்தகராறில் கணவன், மனைவி இருவரையும் துறவியான சின்லியான் கொலை செய்தார். அவர்களது இரண்டு வயது குழந்தையும், சின்லியானின் தாக்குதலில் காயமடைந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சின்லியான் மற்றும் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான சின்லியான், ஷிஜியாங் மாகாணத்தின் ஹாங்ஷா நகரில் உள்ள புத்தமடாலயத்தில் துறவியாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் இந்த மடாயலத்தில் தங்கியிருந்தது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இரண்டு கொலைகளை செய்த குற்றத்துக்காக நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளது.அவர் மீது மற்ற கிரிமினல் புகார்கள் ஏதும் இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment