சரத் பொன்சேக்கா புத்தகம் வெளியிட தீர்மானம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தனது சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளார். தனது பால்ய பருவம் முதல் இராணுவத் தளபதியாக இருந்த காலம் வரை ஒரு புத்தகமாகவும் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சம்பவங்களை மற்றுமொரு புத்தகமாகவும் வெளியிட பொன்சேக்கா தீர்மானித்துள்ளார்.
சரத் பொன்சேக்கா சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களில் அவர் ஆற்றிய சேவைகள் மறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் புத்தகம் வெளியிடும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

Post a Comment