Header Ads



பர்தாவை கழற்ற மறுத்த கட்டார்நாட்டு வீரபெண்மணிகள் - பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

TR

பர்தா அணிந்தபடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்த கத்தார் நாட்டு பெண்களுக்கு பாரிஸ் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்றனர்.

பிரான்ஸ் அதிபராக நிக்கோலஸ் சர்கோசி இருந்தபோது, பெண்கள் பர்தா அணியவோ, தலையை முக்காடிட்டு செல்லவோ தடை விதித்தார். கடந்த ஆண்டு, இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, கத்தார் நாட்டிலிருந்து மூன்று பெண்கள் பர்தா அணிந்த நிலையில் செவ்வாய்கிழமை பாரிஸ் விமான நிலையம் வந்திறங்கினர். விமான நிலைய அதிகாரிகள், அவர்களது பர்தாவை விலக்கும்படி கூறினர். இதற்கு, இந்த பெண்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் பிரான்சில் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதன் காரணமாக, இந்த பெண்கள் மூவரும் மீண்டும் கத்தாருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

3 comments:

  1. 3 பேர் என்ன, 300 பேரை கட்டாருக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், பிரான்சிலிருந்து இறக்குமதியாகும் ஆயுதங்கள், இன்னும் பல ஆயிரக்கணாக்கான இறக்குமதிகளைத் தடை செய்யாது கட்டார் அரசு.

    அவ்வளவு பயபக்தி?

    ReplyDelete
  2. allah rahumath saiwanaha indraya kala sumayakkal

    ReplyDelete
  3. ya ALLAH anda penkalukku arul purivaayaaha....mmmkky

    ReplyDelete

Powered by Blogger.