Header Ads



ஈராக்கில் குண்டுவெடிப்பு - 84 பேர் மரணம், 300 பேர் காயம்



ஈராக்கில் பல்வேறு இடங்களில், புதன்கிழமை  குண்டுகள் வெடித்ததில் 84 பேர் பலியாகினர். ஈராக்கில்  ஷியாகள், பல்வேறு இடங்களில் புனித ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை குலைக்கும் விதமாக பாக்தாத்தில் ஐந்து இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் பலியாயினர்.

கிர்குக் பகுதியில், குர்திஷ் தலைவர் மசூத் பர்சானி தலைமை அலுவலகம் உள்ள இடத்தருகே உள்பட மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 28 பேர் பலியாயினர். குண்டு வெடிப்புகளில் 300 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

No comments

Powered by Blogger.