தலிபான் போராளிகளின் அதிரடி - சிறையிலிருந்த 30 பேரை மீட்டுச்சென்றனர்
ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாண தலைநகர் காரிபுல் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தலிபான்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்த சிறையின் காம்பவுண்டு சுவரை தலிபான்கள் குண்டு வைத்து தகர்த்து சிறிய அளவில் துளை போட்டனர். அதன் வழியாக உள்ளே புகுந்தனர்.
அவர்களை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்ள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ததலிபான்களும் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சண்டை சுமார் 10 நிமிடம் நடந்தது. இந்த சந்தர்ப்பத்தில் கைதிகளாக இருந்த 30 தலிபான்களை விடுவித்தனர்.
துப்பாக்கி சண்டையில் 3 கைதிகள் பலியாகினர். 28 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை வடக்கு மாகாண துணை கவர்னர் அக்தர்முகமது கர்ஷதா தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட 16 கைதிகள் பிடிபட்டதாகவும், மற்றவர்களை தேடிவருவதாகவும் அவர் கூறினார். தெற்கு கந்தகார் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயிலை உடைத்து 500 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது 250 மீட்டர் சுரங்கப்பாதை அமைத்து ஜெயிலுக்குள் சென்றனர்.

Post a Comment