கருக்கலைப்பும் படுகொலைதான் - துருக்கிய பிரதமர் பிரகடனம்
கருக்கலைப்பு ஒரு படுகொலையே என துருக்கிய பிரதமர் ரிசப்தய்யீப் அர்துகான் தெரிவித்துள்ளார். துருக்கியின் பிரதமரான நான் சத்திர சிகிச்சை மூலமான பிறப்புகளுக்கு எதிரானவன்தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்துக்கானின் ஆளும் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி எடுத்துள்ள தீர்மானங்கள் இஸ்லாமிய வழியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு அவரது அரசாங்கமானது குற்றவியல் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.
மேலும் கருவை கலைப்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையதென தெரிவித்துள்ள அவர், தாயின் வயிற்றில்வைத்து கொல்வதும், வெளியில் வைத்து கொல்வதும் சமமானதே. இவற்றுக்கிடையில் வித்தியாசம் இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment