Header Ads



கருவுற்ற பெண் வெளிநாட்டு சென்று பிள்ளைபெறுவது குழந்தை கடத்தலுக்கு ஒப்பானது

கனடாவில் இருந்து கருவுற்ற பெண் அமெரிக்காவிற்கு சென்றது, குழந்தையை கடத்திச் சென்றதற்கு சமம் என ஒண்டோரியாவின் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அமெரிக்கா சென்ற கனடிய பெண்ணிற்கு ஜனவரி மாதத்தில் கலிபோர்னியாவில் குழந்தை பிறந்ததும், அதன் தந்தை குழந்தைக்கு உரிமை கேட்டு ஒண்டோரியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கு முன்பு ஒண்டோரியாவின் கீழ் நீதிமன்றம் கருவுற்ற பெண் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்வது குழந்தையை கடத்திச் சென்றதற்கு சமமாகும் என்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கு பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகையில், குழந்தையோடு ஒரு தாய் தான் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம், அது அந்த பெண்ணுடைய உரிமை, இதில் தந்தை தலையிட உரிமை இல்லை என்று தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.