லண்டனில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு சங்கடம், முழு நாட்டுக்கும் அவமானம் - கரு ஜயசூரிய
பிரிட்டனுக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு எதிர்கொண்ட அனுபவம், முகங்கொடுத்த ஆர்ப்பாட்டம் என்பவை அவருக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. இது முழுநாட்டுக்குமே அவமானம் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இன்று கூறினார்.
ஸ்ரீலங்காவின் அரச தலைவர் என்ற முறையிலேயே ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தலைவராக அங்கு செல்லவில்லை' என ஜயசூரிய செய்தியாளர் மாநாட்டினபோது தெரிவித்தார்.
எனவே ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானத்தை முழுநாட்டுக்குமே ஏற்பட்ட அவமானமாகவே நாம் கருதுகின்றோம். நாம் வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாயினும் எந்தவித அரசியல் சார்புமின்றி நாம் இதை கூறவேண்டியுள்ளது' என அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் என்ன மட்டத்தில் யார் பங்குபற்ற வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டியது அரசாங்கம் என்பதால் இந்த நிகழ்வில் இலங்கை பங்குபற்றியமை தொடர்பில் தனது கருத்தை வெளியிட விரும்பவில்லையென அவர் கூறினார்.
"பல நாடுகள் தமது அரச தலைவர்களை அனுப்பவில்லை. சில நாடுகள் அமைச்சர்கள் மட்டத்திலேயே பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. ஜனாதிபதியின் குழுவில் பலர் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்ற வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்க வேண்டியது வெளிவிகார அமைச்சின் பொறுப்பாகும்' என கருஜயசூரிய கூறினார்.
Post a Comment