கண்டி மீராமக்கம் பள்ளிவாசல் அஸ்கிரிய விகாரை காணியிலேயே உள்ளது - மஹிந்த ராஜபக்ஸ
கண்டி மீராமக்கம் பள்ளி எதிர்காலத்தில் கபளீகரம் செய்யப்படுமா..?
கண்டியிலிருந்து ஜே
அஸ்கிரிய பீடம் ஆரம்பித்து 700 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டி மீரா மக்கம் பள்ளி முன் சுவர் உற்பட ஏனைய் பிரதேசங்களும் ஜனாதிபதியால் 'அஸ்கிரிய விகாரைப் பிரதேசம்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
(12.6.2012) செவ்வாய்கிழமை கண்டியில் நடந்த தேசிய விழாவில் 100 இலட்ச ரூபா பெறுமதி கொண்ட அபிவிருத்திப் பணிகள்அஸ்கிரிய பீட வளவில் பூரணப்படுத்தப்பட்டன. மீராமக்கம் பள்ளி கண்டி அஸ்கிரிய விகாரைக்கான காணியில் கட்டப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெருமையாக நினைவு கூர்ந்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது,
பௌத்தர்கள் மற்றவர்களது உடமைகளைப் பறிப்பவர்கள் அல்ல. மாறாகத் தங்களது உடமைகளை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை கொண்டவர்களாகும்.
பௌத்த மக்களது இரண்டு கண்கள் போல் அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் முழு பௌத்த உலகுக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமுதாயங்களுக்கும் ஒற்றுமையின் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
அஸக்கிரிய பீடமும் பௌத்த சமயமும் இலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் சேவை செய்த ஒரு அமைப்பல்ல. அது இலங்கையிலுள்ள அனைத்து மதங்களையும் கௌரவித்துள்ளது. உதாரணமாக கண்டி மீராமக்காம் தர்ஹா மற்றும் கண்டி மீராமக்கம் பள்ளி என்பன அஸ்கிரிய பீடத்திற்குச் சொந்மான காணியிலே அமைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது கண்டி திருத்துவக் கல்லூரிக்குச் சொந்மான சர்வதேச அஸ்கிரிய கிறிகட் மைதானம் அமைந்துள்ள காணியும் அஸ்கிரி பீடத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியாகும். இப்படிப் பல உதாரணங்களைக் கூறமுடியும். எனவேதான் பௌத்தர்களும் பௌத்தமதம் மற்றவர்களது உடமைகளை அபகரிக்கும் மதமல்ல. மற்றவர்களுடன் தமது உடமைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் மதம் எனலாம்.
1818 ஆண்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் கண்டிய பரபுத்துவ பிரதானிகளுக்கு மிடையே கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது பௌத்தமதம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒரு பிரிவு உற்படுத்தப்பட்டது. அன்று அஸ்கிரிய பீடத்தின் தேரரான வாரியப் பொல ஸ்ரீ சுமங்களத் தேரர் இதற்காகப் பாடுபட்டார். மாத்தளை கலவரத்தின் போது அஸ்கிரி மகாநாயகத் தேரர் தனது உயிரைத் தியாகம் செய்தார். இலங்கையின் மன்னராட்சி நிலைத்திருக்கவும் அதன் பின் எமது சுயாட்சி நிலைத்திருக்கவும் கௌதம புத்தரின் புனித தநத தாது பாதுகாக்கப்பட வேண்டீய கட்டாயக் கடமை இருந்தது. இதை அஸ்கிரிய பீடம் பாதுகாத்து வந்தது.
அது மட்டுமல்ல இன்று கூட புனித தந்தத்தை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கப் பேழையின் திறவுகோள் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வசமே உள்ளது. இவ்வாறு பல வகையிலும் பௌத்தத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் முகமாக அஸ்கிரிய பீடம் மறக்க முடியாத சேவைகள் பலவற்றசை செய்துள்ளது என்றார்.
700 வருட நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை, ஞாபகார்த்த இலட்சிணை, ஞாபகார்த்த கொடி, ஞாபகார்த்த கீதம் என்பன வெளியிடப்பட்டதுடன் ஞாபகார்த்த ஏழுமாடிகளைக் கொண்ட ஓய்வு விடுதி, ஞாபகார்த்த வீதி என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. இவற்றிற்காக பத்துக் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டதாக அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார்.
கண்டி மீரா மக்கம் பள்ளி முன் சுவர் முதல் ஏனைய அனைத்துப் பிரதேசங்களும் ஜனாதிபதியால் அஸ்கிரிய விகாரைப் பிரதேசம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
இவ்வைபவத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, மகிந்தானந்த அலுத்கமகே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற அங்கத்தவர் கரு ஜயசூரிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா உற்படப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

கண்டி மீராமக்காம் பள்ளியும் தங்களுக்கு திருப்பி பறிக்கலாம் என்று சொல்ல வருகிறார்களா?ரவுடித்தனம் செய்த
ReplyDeleteஇயக்க குண்டேர்களே,இதற்கு போராட தயாராக இருங்கள்.உங்கள் போராட்டமெல்லாம் நமக்குள்தானே.
Meraan
சும்மா பொய் வேலையை செய்றாங்கல்,படைத்தவன் ஒருவன் இருக்க என்ன என்னமோ kuthu போடுறாங்கள்,நல்லா போடட்டும் நரகத்துக்கும் ஆல் தேவை தன்னே!
ReplyDeleteகண்டி நகரில் உள்ள மதுபான சாலைகழும் தான் ஒரு காலத்தில் அஸ்கிரிய விகாரைக்கு சொந்தமான இருந்த காணியில் இன்று இருக்கிறது. பேச வேண்டியவர்கள் பேசாவிட்டால் இதையும் சொல்வார்கள் இதற்கு மேலும் சொல்வார்கள்.
ReplyDeleteha ha ha they are in one jamath-but we??????????????
ReplyDelete