கிழக்கு மாகாண சபையை கலைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
கிழக்கு மாகாண சபையை அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன் கலைப்பதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வாக்களார் ஒருவர் ஆணைகோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கே.கே.பி. ரங்கன அமரசிங்க என்பவரே சட்டத்தரணி மொஹான் பாலந்திராவுக்கு ஊடாக இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், ரி.நவரட்ணராஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
10.05.2013 ஆம் திகதி கலைக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாண சபையை முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் விரைவில் கலைக்கவுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்திற்குமுன் மாகாண சபையை கலைக்கக்கூடாதென கிழக்கு மாகாண சபையில் 23.04.2012 ஆம் திகதி தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் முடிவு வரும்வரை மாகாண சபை ஆளுநர் கலைப்பதை தடை செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவொன்றையும் மனுதாரர் கோரியுள்ளார்.

Post a Comment