ரவூப் ஹக்கீம் அரசியல் தற்கொலை செய்வாரா..?
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் தாம் இணைந்து போட்டியிடுவதென்றால் தமது கட்சியைச் சேர்ந்த ஒருத்தர் முதலமைச்சர் வேட்பாளராக பிரகடனம் செய்யப்பட வேண்டும் இன்றேல் தனித்துப் போட்டியிடவேண்டி வரும் என்று அண்மையில் மு.கா.வின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அறிக்கை ஒன்றை ஊடகங்கள் மூலம் விட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுவதாக இருந்தால் அதன் முதலமைச்சர் வேட்பாளராக ரவூப் ஹக்கீமே இருப்பார் என்று பலராலும் ஆரூடம் கூறப்படுகின்றது. எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் பொத்துவிலில் மு.கா. சிரேஷ்ட உறுப்பினர்களிடையே நடைபெறும் கலந்துரையாடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தனித்து போடியிட்டால் , ரவூப் ஹகீம் மட்டும் அல்லர் மறைந்த தலைவர் அஷ்ரபே வந்து நின்றாலும் இந்தமுறை நடக்கின்ற கிழக்குத் தேர்தலில் மு.கா.எப்படியும் ஆட்சியமைக்க முடியாது என்பது அரசியல் அவதானிகளின் ஏகோபித்த கருத்தாகும்.. அன்று நடந்த மாகாண தேர்தலில் ஹக்கீம் மட்டுமல்ல ஒரு "முஸ்லிம் காங்கிரசு மண்டலமே" ஐ.தே.க.வுடன் சேந்து போட்டியிட்டும் அவரால் முதலமைச்சராக வர முடியவிலை. ஆனால், மு. கா.வுக்கு முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்க கூடிய சக்தி மட்டும்தான் இருக்குமே தவிர முதலமைச்சராகக் கூடிய அறுதிப் பெரும் பான்மை பலம் கிடைக்காது என்றே எல்லோரும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
மு.கா. ஆனது தேர்தலுக்குப் பின் , அரசாங்க அணிக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆட்சி பீடத்திற்குக் கொண்டு வந்து அவர்களில் ஒருத்தரை முதலமைச்சராக்கிப் பார்க்கக் கூடிய பலம் இருக்கலாம் . ஆகக் கூடினால், ரவூப் ஹக்கீமும் ஒரு மாகாண சுகாதார அமைச்சராகப் போகலாம் . ஆனால் அரசாங்கம் இந்தக் கூட்டை அதாவது தமிழ் கூட்டமைப்பு அரியாசனம் ஏறுவதை ஒருக்காலமும் விரும்பாது.
இதனால் அரசாங்கம் மு.கா.வுடன் யாருமே எதிர்பார்க்காத இன்னுமொரு பேரம் பேசலுக்கு வரலாம் என்று புலம்பெயர் ஆய்வாளர்கள் நம்புகின்றார்கள். அதுதான் "தேசிய அரசாங்கத்தில் சில கெபினட் ( இரண்டு) பதவிகளையும் பிரதி அமைச்சர் பதவிகளையும் தருகின்றோம்; தமிழ் கூட்டணியைப் புறந் தள்ளுங்கள்" என்பதாகும் . ரவூப் ஹகீம் மட்டும் அமைச்சுப் பதவிகளை தொடர்ந்தும் அனுபவித்துவருவதை விரும்பியும் விரும்பாமலும் வெந்தும் வேகாமலும் மிக மிகக் கிட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்த மு.கா.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மிக மிகத் தூரம் சென்று விட்ட தலைவரை மாகாண சபை உறுப்பினர் பதவிக்குள்ளேயே முடக்கி விட்டு , அரசாங்கத்தின் பேரம் பேசலுக்கே தம் கவனத்தை செலுத்துவர் என்பதை யாவரும் அறிவர்.
இதனால்தான் ரவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் , கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் என்ற இரண்டு விதமான அரசியல் வாழ்க்கை இருக்கப் போகின்றது அது மிகை ஆகாது.
தற்போது,அரசாங்கத்தின் பேரம் பேசலுக்கு முகம் கொடுக்கப் புறப்படும் ரவூப் ஹகீம் , தன்னிடம் எஞ்சியுள்ள மாகாண உறுப்பினர் பதவியை இராஜினாமாப் பண்ணிவிட்டு தனது பழைய பாணியில் மீண்டும் பாராளுமன்ற ஆசனத்துக்கு வர முயற்சிப்பார். ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் ஐ.தே.கட்சியில் எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்ட இவரை ஐ.தே.க. ஒருபோதும் இம்முறை மீண்டெழுந்து வர அனுமதிக்காது என்பதை அரசியல் களத்தில் உள்ள எவரும் மறுதளிக்க மாட்டார்கள். ஏனெனில், அண்மைக்காலமாக ஐ.தே.கட்சிக்கும் ,முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏட்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவையும் தேர்தல் வேட்புமனு செய்யலாம் என்பது தொடர்பான 18 ஆம் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தமை, அரசாங்கத்தில் பங்காளியாகச் சேர்ந்தமை , ஜெனீவாவுக்குச் நேரடியாகச் சென்று அரசுக்கு ஆதரவு பெற்றுக் கொடுத்தமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் ஐ.தே.க. ஆனது குறிப்பாக ரவூப் ஹக்கீமுடன் மிகவும் மனவருத்தத்தில் உள்ளது.
இந்தநிலையில்,ரவூப் ஹகீம் தனது பாராளுமன்ற ஆசனத்தை மீட்கும் முயற்சியில் நீதி மன்றம் செல்லலாம். ஆனால், அரசாங்கம் கூட இவருக்கு ஒத்துழைக்காது. ஏனெனில், அரசாங்கமும் தனிப்பட்ட ரீதியில் இவரோடு அதிருப்தியில் உள்ளது. கிழக்குத் தேர்தலில் தனக்கு ஒத்துழைக்காமல் தனித்துப் போட்டியிட்டமை, தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையில் ஜனாதிபதியின் நேரடிச் சந்திப்பு திருப்தியளிக்காவிடின் அரசாங்கத்தை விட்டு விலகவேண்டி வரும் என்று பகிரங்கமாக எச்சரித்தமை, இதனால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முஸ்லிம் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியமை, மிக நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கின்ற தமிழ் கைதிகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்துவதட்காக "விசேட நீதி மன்றங்கள் " அமைக்கப் பட வேண்டும் எனக் கூறி தமிழர்களிடம் நல்ல பிள்ளையாகி அரசாங்கத்தை மேலும் சிக்களுக்குள்ளாக்கியமை (மனோ கணேசனும் ரவூப் ஹகீமை பாராட்டி அரசாங்கத்தை விமர்சித்திருந்தார் ) போன்ற காரணங்களினால் அரசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ள பலர் ரவூப் ஹக்கீமுடன் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதனாற் ரவூப் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரசில் இருந்து தூரமாக்குவதட்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்துவர்.
ஆதலால், தமிழ் கூட்டமைப்பை முதலமைச்சராக்குவதைவிட அரசாங்கத்தால் கிடைக்க உள்ள அமைச்சுப் பதவிகளை ,ரவூப் ஹக்கீமை புறம் தள்ளி விட்டு மற்றைய மு.கா.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கிட்டுக் கொண்டு மீண்டும் அரச அணிக்குச் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர் .
முன்பும் கூட ரவூப் ஹகீம் இந்த அரசாங்கத்தில் இணைந்து கருமமாற்ற விரும்பியிருக்கவில்லை .மு.கா.விலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களின் வற்புறுத்தல்கள் காரணமாகவே அவர் அரசாங்கத்துடன் நீதி அமைச்சுப் பதவியுடன் சங்கமமாக வேண்டியிருந்தது. அந்த முடிவை அவர் எடுக்கத் தாமதித்திருந்தால் சிலர் அதாவுல்லாஹ் ,ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் பாணியில் கட்சியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்றும் அந்தநேரம் கதைகள் அடிபட்டன.
இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் , ரவூப் ஹகீம் முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளராக வந்து தனித்துப் போட்டியிடுவது ஒரு வித்தை அல்ல. தேர்தலுக்குப் பின்னர் அவர் எவ்வாறான நெருக்கடிகளை எதிர் கொள்ளப்போகின்றார் ; அவைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றார் என்பதுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.
ஆகவே ,ரவூப் ஹகீம் இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் குதிப்பதற்கு முன் ,தன் மீது உறுதியான மிகவும் பலமான பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொள்ளத் தவறுவாறாயின் அது அவரை முஸ்லிம் காங்கிரசு அரசியலில் இருந்து ஓரங்கட்டும் ஒரு அரசியல் தற்கொலை முயற்சிக்கு ஒப்பாகக் கருதப்படும்.

Razaak ,
ReplyDeleteYou are telling exactly right mate,he does not care muslims
in this country,he wand to take care his chair.
Jamal
It is not a big deal as you have written here. Hassan Ali came through national list, so he can re-enter, bcz Hassan Ali will resign for Hakeem. Btw He is a great person as I know and he will do something different as his style. As Muslim party; Athaullah, Hisbullla and others couldn't aceive anything in the last PCE !!!
ReplyDeleteJay Jay
நல்ல ஆய்வு. வாழ்த்துக்கள். உங்கள் கதையைப் பார்த்தால் கிணறு வெட்ட பூதம் வெளிக்கிட்ட கதையாகும் போலே இருக்கு. அதாவது இன்னுமொரு காபினட் பதவி முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக கான்கிரசிக்குக் கிடைக்கப் போகுது என்று சொல்லுங்க.
ReplyDeleteChange the phrase //தலைவர் அஷ்ரப் வந்து நின்றால் கூட//
ReplyDelete