Header Ads



இலங்கையில் மதங்களுக்கிடையே போர் நடைபெறுகிறது - மனோகணேசன்

இலங்கை மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக  மாறி, தற்போது மதப்போராக உருமாறி வளர்ந்துகொண்டிருப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுவே நாட்டில் தற்போது காணும் வளர்ச்சியாக இருப்பதாக  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்..

இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட தெரிவு செய்யப்பட்ட பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளை அழைத்து கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது.

இதுதவிர, குறித்த மாநாட்டிற்கு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஹவ்லக் வீதி சம்புத்தத்வ பௌத்த மணடபத்தில், தேசிய சர்வமத மாநாடு இடம்பெற்றது..

நாடு முழுக்க இருந்து பெருந்தொகையான பிரதிநிதிகளுடன், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், மாதுலுவாவே சோபித தேரர், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், ஆகியோருடன் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே மனோகணேசன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்..

No comments

Powered by Blogger.