'நிலவின் கீறல்கள்' கவிதை தொகுப்பும், இறுவட்டு வெளியீடும் (படங்கள்)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
ஷாமிலா ஷெரீப் எழுதிய 'நிலவின் கீறல்கள்' கவிதை தொகுப்பும் இறுவட்டு வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமை(17) வெள்ளவத்தை கொழும்பு தமிழ் சங்கத்தில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைமோகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் கலாநிதி துரைமோகனிடமிருந்து பெறுவதை படத்தில் காணலாம். நூலசிரியை ஷாமிலா ஷெரீப், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், சட்டத்தரணி மர்சூம் மௌலானா எழுத்தாளர்களான திருமதி ராணி சிறீதரன், பத்மா சோமகாந்தன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.













Post a Comment