நான் சிறையிலிருந்து விடுவித்தவர்கள் அநியாயத்திற்கு துணைநிற்பதா..? - வேதனைப்படும் றிசாத்
மடுவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
கடந்த 30 வருடம் ஏற்பட்ட அழிவிலிருந்து மக்களை மீட்சி பெறச் செய்வதற்கு எம்மால் முன்னெடுக்ப்படும் அபிவிருத்தி திட்டங்களை தடுக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். அன்று தடுப்பில் இருந்த போது அவர்களை விடுவித்துதருமாறு என்னிடம் விடுத்த வேண்டுகோளை நான் நிறைவேற்றினேன். அவ்வாறு இருந்தவர்களில் சிலர் மீண்டும் இந்த அநியாயத்துக்கு துனை போவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம்,கண்ணி பிரிவு வகுப்பறை கட்டிடங்கள் என்பனவற்றை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.குரூஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த திறப்பு விழாவில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது,
இந் பிரதேச மக்கள் அப்பாவி,ஏழை மக்கள். இந்த மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் இந்த மக்களை வறுமைப்படுத்தி தமது பாராளுமன்ற ஆசனங்களை தக்க வைத்துக் கொள்பவர்கள். தெடர்ந்தும் இந்த மக்களை அரச விரோதிகளாக காட்டிக் கொடுக்கும் ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அன்று யுத்தத்தை இந்த மண்ணுக்கு கொண்டு வந்து பேரழிவை ஏற்படுத்துவதற்கு துனை போனவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இவர்களின் செயல்களினால் எமது கிராமத்தில் இன்று எத்தனை ஆயிரம் இளைஞர்கள் வேதனைப்பட்டு வாழ்கின்றனர். விதவைகளின் எண்ணிக்கையினை பார்க்கலாம். ஆங்கவீன முற்றவர்களை கானுகின்றோம். அழிந்த சொத்துக்களை பார்க்கின்றோம்.
இந்த் கூட்டமைப்பின் பிள்ளைகள் எத்தனை பேர் யுத்தகலத்தில் நின்று போராடினார்கள் என்றால் அது பூச்சியம் என்ற பதிலினைத் தான் தரும். அவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் கல்வி கற்கின்றனர். ஆனால் எமது பிள்ளகைள் இந்த பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துனைபோக வேண்டும். இது தான் இந்த அரசியல் வாதிகளின் செயற்பாடாகும் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். யதார்த்தத்தை புரியாமல் மீண்டும் வீர வசனங்களை பேசி எமது மக்களை உசுப்பேத்தி இல்லாத வற்றை புனைந்து இந்த அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகத்திரைகள் கிழிக்கப்பட வேண்டும்.
இது எமது மண். எமது மாவட்டம். இதில் அனைத்து அபிவிருத்திகளையும் சுவைப்பதற்கு எமக்கு உரிமையுண்டு. அதனை இங்கு கொண்டு வர வேண்டாம் என்று சொல்லுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
கடந்த 30 வருட காலம் நாம் பட்ட துன்பங்களும்,துயரங்களும் ஏராளம் மீண்டும் மீண்டும் பழையதை பேசி எமது காலங்களை வீனடிப்பதில் எவ்வித பிரயோசனமுமில்லை.இந்த மக்களின் அபிவிருத்திக்கு எதையும் செய்து கொடுக்கமுடியாத நிலையில் இந்த கட்சிகள் இருக்கின்றன.அவற்றை நம்பி மக்கள் பின் செல்வார்கள் என்றால் அவர்களே தங்களது எதிர்கால சமூகத்தினை இல்லாமல் ஆக்குபவர்களாக மாறிவிடுவர்கள். இநத வடக்கின் அழிவுக்கு வித்திட்ட பொறுப்புதாரிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இருக்கின்றனர்.
இன்று எம்மால் இந்த மக்களுக்கு கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை தடுத்து நிறுத்த எடுக்கப்படும் எந்த தடைகளையும் தாண்டி இந்த மண்ணில் அபிவிருத்தியினை கொண்டுவருவோம். அதன் மூலம் இந்த மக்கள் ஏனைய மாவட்ட மக்கள் அனுபவிக்கும் அத்தனை அபிவிருத்திகளையும் அனுபவிக்கச் செய்வோம்.
இன்று இந்தப் பிரதேசத்தின் ஊடாக யாழ்பாணத்துக்கான இலகு பாதை ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. இதனது புனரமைப்பு பணிகளுக்கென பலகோடி ரூபாய்களை கொண்டுவந்துள்ளோம். அதன் மூலம் நன்மையடையப் போவது இந்த பிரதேச மக்கள் என்பதை மறந்துவிட முடியாது. எமது மக்கள் அனுபவிக்கும் நன்மைகளை சில சுயநலவாத சக்திகள் தடுப்பது இந்தமக்களுக்கு செய்யும் அநீயாயமாகும் என்றும் அமைச்ர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Post a Comment