Header Ads



தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு..!



ஏ.எஸ்.எம். இர்ஷாத்  
                 
தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று(12) நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கை 
இதில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய, பிரதி தேர்தல் ஆணையாளர்(நிர்வாகம்) எம்.எம்.மொஹமட், மேலதிக தேர்தல் ஆணையாளர்களான யு. அமரதாஸ, ஆனந்த ரத்நாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
                           
 தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு நடவடிக்கைகள்.

சனநாயக ஆட்சி முறையொன்றின் கீழ் மக்கள் பிரதிநிதிகளை வாக்கெடுப்பின் மூலம் தேர்தெடுப்பதற்காக, தகைமையுள்ள வாக்காளர்களை பதிவு செய்தல் அடிப்படை தேவைப்பாடொன்றாகும். வலுவிலுள்ள சட்டத்திற்கிணங்க தேருநர்களைக் கணக்கெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டத்திற்கிணங்க தேருநர்களை கணக்கெடுத்து இடாப்பை தயாரித்தல் தேர்தல் நிருவாகத்தின் பொறுப்பாகும்.
 இலங்கையில் தேருநர்களைக் கணக்கெடுத்தலும் தேருநர் இடாப்பை தயாரித்தலும் 1980ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களைப் பதிவு செய்தல் சட்டத்திற்கிணங்க மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கிணங்க தேர்தல் மாவட்டமொன்றுக்கான பொறுப்பாளர் மாவட்ட பதிவு அலுவலராவார்.(அரசாங்க அதிபர்ஃ மாவட்ட செயலாளர்) என்பதுடன் இது தொடர்பாக அவருக்கு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் தேர்தல் ஆணையாளர் வழங்குவார். இப்பணிகள் மாவட்ட மட்டத்தில் ஒன்றினைத்தல், அதனுடன் தொடர்புடைய அலுவலகஃ ஒன்றினைப்புப் பணிகள் உதவிப் பதிவு அலுவலர்களாக கடமையாற்றும் மாவட்ட பிரதி ஃ சிரேஷ்ட உதவி ஃ உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களினால் நிறைவேற்றப்படுகின்றன.

 அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரைக்கமைய இலங்கை சனநாயக குடியரசின் இறைமை மக்களுக்குரியதாகும். ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பன இறைமையின் கீழ் உள்ளடங்கும்.

மக்களின் இறைமையின் கீழ்வரும் ஆட்சி அதிகாரத்தின் கீழ் சட்டமாக்கற் தத்துவம் பாராளுமன்றத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் தீர்ப்பொன்றின்போது அது மக்களாலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
 அதற்கிணங்க மக்கள் தம் வாக்குரிமையைப் பிரயோகித்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் உறுப்பினர்களும், மக்களது வாக்குரிமையைப் பிரயோகித்து நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் சனாதிபதியொருவரையும் தேர்ந்தெடுப்பர்.

உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் நீதியரசர்களை நியமனஞ் செய்தலும் பதவி நீக்கலும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற சனாதிபதியவர்களால் மேற்கொள்ளப்படும்.

 மேலே காணப்படும் தகவல்களுக்கிணங்க பொதுமக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி மக்கள் இறைமையான ஆட்சி அதிகாரத்தை வழிநடாத்துகின்றமையால் மக்களின் இறைமையான வாக்குரிமையின் முக்கியத்துவம் யாதென  தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் 4(உ) உறுப்புரைக்கிணங்க 'வாக்காளரொருவதற்கான தகைமையைப் பெற்று தனது பெயரை தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ள சகல பிரசைகளுக்கும் வாக்குரிமையை செயற்படுத்த முடியும். இதற்கிணங்க எவரேனுமொரு பிரசைக்கு தனது வாக்குரிமையை செயற்படுத்த இயலுமாவது தேருநர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்பட்டிருந்தால் மாத்திரமேயாகும்.

 3. தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு நடவடிக்கைகள் ஒவ்வோர் ஆண்டும் யூன் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாவதால் அதற்கு முன்னர் இந்த கணக்கெடுக்கும் நடவடிக்கைகளில் பங்குபற்றும் கணக்கெடுப்பு அலுவலர்கள்(கிராம அலுவலர்கள் அல்லது விசேட கணக்கெடுப்பு அலுவலர்கள்) பயிற்றப்படுவர். இலங்கைத் தீவின் பெரும்பாலான பிரதேசங்களில் கிராம அலுவலர்கள் மூலம் இத்தேருநர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென்பதுடன், கொழும்பு நகரம், திருகோணமலை நகரம், தெஹிவளை, நீர்கொழும்பு நகரங்களை அண்மித்த சில பிரதேசங்களில் மாத்திரம் கிராம அலுவலர்களுக்கு மேலதிகமாக அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள விசேட கணக்கெடுப்பு அலுவலர்கள் ஒரு சிறுதொகையினரும் நியமனஞ் செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

4. தேருநரொருவராக பதிவு செய்வதற்கு குறிப்பட்ட ஆண்டின் யூன் மாதம் 01 ஆம் திகதிக்கு,
* இலங்கை பிரசையொருவராக இருத்தல்
* வயது 18 வருடங்களைப் பூர்த்தி செய்திருத்தல்
* குறிப்பிட்ட முகவரியில் சாதாரண வதிவைக் கொண்டிருத்தல்
மேற்குறித்த தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பினும் அரசியலமைப்பின் 89 ஆம் உறுப்புரையில் காணப்படும் ஏதேனுமொரு தகைமையிழப்பிற்கு ஆளாகியிருந்தால் தேருநரொருவராக பதிவு பெறும் சந்தர்ப்பம் கிடைக்காது.
அவைகள் சுருக்கமாக கீழே காட்டப்பட்டுள்ளன.

• இலங்கையில் வலுவுடையதாகவிருக்கும் ஏதேனும் சட்டத்தின்கீழ் சித்த சுவாதீனமற்றவரென வெளிப்படுத்தப்பட்டிருந்தால்,
• இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியல் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்கான மறியல் தண்டனையை அனுபவித்து வருபவராயிருந்தால், அல்லது நேர்;முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனையை அனபவித்தவரொருவராயிருத்தல்,
 • தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்களை புரிந்திருந்தால்,
• இலஞ்ச சட்டத்தின்கீழான தவறுகள்,
• குடியியற் தகுதியீனம்

5. கிராம அலுவலர்கள் ஊடாக அல்லது விசேட கணக்கெடுப்பு அலுவலர்கள் ஊடாக குறிப்பிட்ட ஆண்டின் யூன் மாதம் 01 ஆம் திகதி முதல் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள படிவமொன்று(டீஊ படிவம்) சகல பிரதான குடியிருப்பாளர்களுக்கும் கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்பதுடன் அந்த படிவத்தின் 1 ஆம் பகுதியில் அந்த வீட்டிற்கான வீட்டு இலக்கம் உட்பட உரிய தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன 2011 ஆம் ஆண்டின்; தேருநர் இடாப்புத் திருத்தித்திலிந்து அந்த வீட்டிற்கான தேருநர்களின் தகவல்கள் அடங்கிய இடாப்பின் குறிப்பிட்ட பகுதியையும் டீஊ படிவத்தில் ஒட்டி கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம் பிரதான குடியிருப்பாளர் தனது வீட்டின்கீழ் பெயர்கள் உட்சேர்க்கப்பட்டுள்ள தேருநர்கள் யார்? என்றும் அவை சரியா? வென்றும் அடையாள அட்டை இலக்கங்கள் சரியா? வென்றும் பரீட்சித்து பார்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 டீ.ஊ படிவங்களின் விநியோகம் யூன் மாதம் 01 ஆம் திகதி முதல் யூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் மேற்கொள்;ளப்படவுள்ளதுடன் அதுவரையில் ஏதேனுமொரு வீட்டிற்கு டீ.ஊ படிவமொன்று கிடைக்கப்படவில்லையாயின் உடனடியாக கிராம அலுவலரை அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்.

இதற்கு மேலதிகமாக 2012.07.15 ஆம் திகதி முதல் 2012.09.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் கிராம அலுவலரிடமிருந்து, மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து அல்லது தேர்தல்கள் திணைக்கள இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய ருநு படிவமொன்றின் மூலம் உரிய விபரங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கு ஆற்றுப்படுத்த முடியும்.

6.கணக்கெடுப்பு அலுவலரிடமிருந்து பிரதான குடியிருப்பாளருக்குக் கிடைக்கப் பெறும் படிவத்தை பூர்த்தி செய்து அதை மீள கையேற்பதற்காக வீட்டிற்கு வருகை தரும் கணக்கெடுப்பு அலுவலரிடம் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்களையும் பரீட்சித்துபார்ப்பதற்காக கையளிப்பது பிரதான குடியிருப்பாளாரின் பொறுப்பாகும். பிரதான குடியிருப்பாளர் டீஊ படிவத்திலுள்ள அறிவுறுத்துரைகளையும் கவனத்திலெடுத்து தனது வீட்டின்;கீழ் தகைமை பெற்றுள்ள அனைத்து தேருநர்களின் பெயர்களையும் அதில் உட்சேர்ப்பதற்கும் புதிதாக வதிவுமாறி வந்திருக்கும் சந்தர்ப்பங்களில் முன்னைய வதிவு முகவரியை குறிப்பிடுதவற்கும் அடையாள அட்டை இலக்கங்களை சரியாக குறிப்பிடுவதற்கும் கேட்கப்பட்டிருக்கும் ஏனைய தகவல்களையும் பூர்த்தி செய்து உரிய இடத்தில் தனது பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு கையொப்பத்தையுமிட்டு கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

பிரதான குடியிருப்பாளர்களிடமிருந்து டீஊ படிவங்களை மீள கையேற்றல் 2012.09.09 ஆம் திகதியுடன் முடிவுறுத்த வேண்டியுள்ளமையால் அதுவரையில் உங்கள் வீட்டிற்கு கிடைத்த படிவத்தை பூர்த்தி செய்து மீள கையளிக்க முடியாதுபோய் இருப்பின் உடனடியாக கிராம அலுவலரை விசாரிக்கவோ மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவிக்கவோ வேண்டும். கிராம அலுவலர் அப்படிவங்களை திரும்ப கையேற்கும்போது அடையாள அட்டைகள், பிறப்புச்சாட்சி பத்திரங்கள், பிரசாவுரிமை சான்றிதழ்கள் என்பவற்றை பரீட்சித்து உட்சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் சரியாக உள்ளதாவென பார்த்துவிட்டு கையேற்கப்பட்டதற்கான பற்றுச்சீட்டொன்றை பிரதான குடியிருப்பாளருக்கு வழங்க வேண்டும்.

7. கணக்கெடுப்பு அலுவர்களால் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசியல் கட்சி முகவர்;களை கிராம அலுவலர் பிரிவுவாரியாக நியமனஞ் செய்யும்படி தேர்தல்கள் ஆணையாளர் சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவிப்பார். அவ்வாறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் நியமனஞ் செய்யப்படுகின்ற முகவர்கள் கணக்கெடுப்பு அலுவலர்கள் டீஊ படிவங்களை பிரதான குடியிருப்பாளர்களுக்கு விநியோகிப்பதற்காக வீடுவீடாக செல்லும்போது அத்துடன் செல்வதற்கும் அந்நடவடிக்கைகள் முடிவுள்ளதும் கிராம அலுவலர்களின் அலுவலகத்தில் அவற்றை பரீட்சித்து அதுதொடர்பான கண்காணிப்பு அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணையாளருக்கு கையளிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிழையற்ற தேருநர் இடாப்பொன்றை தயாரித்துக்கொள்ள முடியுமென நம்பப்படுகின்றது.

8. இவ்வாறு தேருநர்கள் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளின்போது எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு அவதானிக்கப்படவுள்ளது. விசேடமாக அதுதொடர்பாக பொதுமக்கள் காட்டும் ஆர்வமற்றதன்;மை இப்பணிகளுக்கு தடையாக அமைகின்றது. தனது பெயரை ஒரு வருடம் தேருநர் இடாப்பில் உட்சேர்த்துவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் உட்சேர்க்கும் தேவைப்பாடு இல்லையெனவும் பெயர் எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்தும் பதிவாகுமென்றும் அவர்கள் கருதுகின்றனர். எனினும் வருடா வருடம் பெயர்களை உட்சேர்த்து டீஊ படிவத்தை கிராம அலுவலருக்கு கையளிக்காவிட்டால் அவர்களின் பெயர்கள் தேருநர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுவிடும். தற்சமயம் பாடசாலைகளுக்கு சிறுவர்களை உட்சேர்ப்பதற்கும், பல்வேறு நேர்முக பரீட்சைகள் போன்ற தேவைகளுக்கும் தேருநர் இடாப்பை கோருவதும் அந்த நேர்முகப் பரீட்சைகளின் போது தேருநர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படுவதும் காணிகளின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் இது பயன்படுத்தப்படுவதால் பதிவு இல்லாதபோதும் பெயர்கள் உட்சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த இடாப்புகளை தயாரிக்கின்றபோது கணக்கெடுப்பு அலுவலர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

09. கணக்கெடுப்பு அலுவலர்கள் களக் கணக்கெடுப்பு பணிகளை முடிவுறுத்தியதும் குறிப்பிட்ட டீஊ படிவங்களை கிராம அலுவலர் பிரிவின் கிராமங்கள், வீதிகள், தெருக்கள் என்பவற்றின்கீழ் கட்டுக்களாக கட்டி தேர்தல்கள் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததும் வாக்கெடுப்பு பிரிவுகளுக்கு பொறுப்பான அலுவலர்களால் பரீட்சித்து பார்த்து கையேற்கப்படுகின்றது. அவ்வேளையில் விசேடமாக நடைமுறை இடாப்பிலிருந்து நீக்கவேண்டியுள்ள பெயர்களடங்கிய நிரலொன்றை('அ' நிரல்), நடைமுறை இடாப்பிற்கு புதிதாக சேர்க்கவேண்டியுள்ள பெயர்;களடங்கிய நிரலொன்றை ('ஆ' நிரல்) கையேற்கப்படுவதுடன் இதன் மூலம் அடுத்த ஆண்டின் தேருநர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகின்றன. இச் சந்தர்ப்பத்தில் மாவட்டத்தினுள்ளும் மாவட்டங்களுக்கிடையேயும் பன்மை பதிவுகளை பரீட்சித்து தேருநர்களை அறிவுறுத்தி ஒரு முகவரியிலிருந்து பெயர் நீக்கப்படும். வாக்கெடுப்பு பிரிவுக்கு பொறுப்பான அலுவலரினால் கையேற்கப்படும் இந்த 'அ' 'ஆ' நிரல்களின் பெயர்கள் கணினிமயப்படுத்தி அதன் பிரதியை நடைமுறையிலிருக்கும் இடாப்பின் பிரதிகளுடன் மாட்ட தேர்தல்கள் அலுவலகங்களில், சகல கிராம அலுவலர் அலுவலங்களில், சகல பிரதேச அலுவலங்கள், உள்ளராட்சி நிறுவனங்கள், சகல அஞ்சல் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். அவ்வாறு காட்சிப்படுத்தல் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் 28 நாட்களுக்கு இடம்பெறுமென்பதுடன், அக்காலப்பகுதியினுள் எவரொருவருக்கேனும் தனது பெயர் அல்லது வேறு ஒருவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையாவென பரீட்சித்து பார்த்து மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகைமையற்றவரொருவரின் பெயர் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டோ அல்லது உட்சேர்ப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டோ இருக்குமாயின் அதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் எவராலும் முடியும். இச்சந்தர்ப்பம் குறிப்பிட்ட ஆண்டின் தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்ப்பதற்கு எவரொருவருக்கேனும் கிடைக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். ஆகவே ஆரம்ப கணக்கெடுப்பு பணிகளின் பின்னர் கிடைக்கும் இச்சந்தர்ப்பத்தில் தனது பெயரை இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையாவென பரீட்சித்து பார்த்து இல்லாதிருப்பின் உரிமை கோரிக்கையொன்றை சமர்ப்பித்தல் அனைவரினதும் பொறுப்பாகும். இவ்வாறு செய்யாது தேருநர் இடாப்பு அத்தாட்சிபடுத்தப்;பட்டதன் பின்னர் அல்லது தேர்தலொன்று நடக்கும்போது அல்லது வேறேதும் தேவைக்காக இடாப்பை பரீட்சித்து பெயர் இல்லையென அறிந்தும் அதற்காக கோரிக்கைகளை சமர்ப்பித்தல் பயனற்ற செயலொன்றாகும்.

10. மேற்குறித்த காலப்பகுதியினுள் உரிமைக் கோரிக்கையொன்றை அல்லது ஆட்சேபனையொன்றை சமர்ப்பிக்கப்படுமாயின் அது சம்பந்தமாக கோரிக்கை விடுத்தவரிடமும் குறிப்பிட்ட பிரிவின் கிராம அலுவலரிடமும் தகவல்கள் கோரப்படும். அவ்வாறு தகவல்கள் கேட்கும்பட்சத்தில் தேவையான தகவல்கள் சரியாக பெற்றுக்கொள்ளப்படுமாயினும் குறித்த கிராம அலுவலர் அதை உறுதிப்படுத்தியிருப்பாராயின் நேர்முகப்பரீட்சைக்கு முகங்கொடுக்;காது தனது பெயரை தேருநர் இடாப்பில் உட்சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அல்லது உரிமை ஃ  ஆட்சேபனை விசாரணையொன்றுக்கு அவர் முகம்கொடுத்து அவரது தகைமை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நிரூபித்தல் வேண்டும். தகைமை பெற்றிருப்பது உறுதியாகுமாயின் உரிமை கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இடாப்பில் பெயர் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும். எவரேனுமொருவர் தகைமை இல்லாது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்படுமாயின் அந்தப் பெயருக்கான ஆட்சேபனையையும் தெரிவிக்க முடியும். அது இரண்டு பிரதிகளில் சரியான தகவல்களைக் கொண்டதாகவிருத்தல் வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கின்றவரை குறிப்பிட்ட ஆளுடன் விசாரணைக்கு அழைக்கப்படும். அவ்வேளையில் அவர் அவ்விடத்தில் வதிவைக் கொண்டவரல்லவென்றும் வேறு இடத்தில் வதிவதாகவிருந்தால் அதுதொடர்பான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும். ஆட்சேபனைக்காக தெரிவிக்கப்படும் விடயங்களைக் கொண்டு விசாரணை நடத்துபவர் மற்றவரிடம்(ஆட்சேபனைக்குள்ளானவரிடம்) இது தொடர்பாக விசாரிக்க வேண்டுமா இல்லையாவென தீர்மானிப்பார்.

11. மாவட்ட பதிவு அலுவலரினால் மேற்கொள்ளப்படும் உரிமைக்கோரிக்கை ஃ ஆட்சேபனை தெரிவித்தல்கள் என்பவற்றின் விசாரணைகளின் பெறுபேறுகள் உரிமைக் கோரிக்கை சமர்ப்பித்தவர்களுக்கும் ஆட்சேபனையொன்றாயின் அதை சமர்ப்பித்தவருக்கும் ஆட்சேபனைக்குள்ளானவருக்கும் அறிவிக்கப்படும். இந்த தீர்மானத்திற்கு இணங்கவில்லையாயின் பத்து நாட்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் இம்முடிவிற்கெதிராக மேன்முறையீடொன்றை செய்யலாம்.

12. அதற்கிணங்க கணக்கெடுப்பு அலுவலர் கணக்கெடுப்பின் இறுதியில் தேர்தல்கள் அலுவலகத்திற்கு கையளிக்கின்ற 'அ' 'ஆ' நிரல்களைக் கொண்டும் அவை காட்சிப்படுத்தப்படுவதன் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற உரிமைக் கோரிக்கை ஆட்சேபனைத் தெரிவித்தல்களின் விசாரணைகள் முடிவடைந்ததும் ஒவ்வொரு வாக்கெடுப்பு மாவட்டவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைக் கோரிக்கைகளை உட்சேர்த்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சேபனை தெரிவித்தல்களின் பெயர்களை நீக்கியும் குறிப்பிட்ட வருடத்திற்கான இடாப்பு தயாரிக்கப்படுவதுடன் அதை தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட திகதியில் அத்தாட்சிப்படுத்துவார். 2012 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பான முன்நிகழ்ச்சி திட்டத்திற்கிணங்க 2012.12.31 ஆம் திகதி அத்தாட்சிப்படல் வேண்டும். இவ்விடாப்பு அடுத்த ஆண்டின் இடாப்;பு தயாரிக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தும் வரை செல்லுபடியாகும். அக்காலப்பகுதியினுள் தேர்தல்களேதும் நடாத்தப்படுமாயின் அதற்கான செல்;லுபடியான இடாப்பு இதுவாகும்.

No comments

Powered by Blogger.