எகிப்தியர்களே அல்லாஹ்விற்கு பயந்து இஹ்வான்களுக்கு ஆதரவளியுங்கள் - யூசுப் அல் கர்ளாவி
IT
எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் நீதியைத் தெரிவு செய்யுமாறு அனைத்து எகிப்தியர்களையும் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி கோரியுள்ளார். தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோருவது குறித்து எச்சரித்த அவர் அப்படிச் செய்வது சாட்சி சொல்ல மறுப்பதைப் போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
எகிப்து மக்களுக்கு அவா் அனுப்பி வைத்துள்ள ஒளிவடிவச் செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”எகிப்து மக்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். மிகப் பொறுத்தமானதை தெரிவு செய்து அவர்கள் அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும். தற்போதைய தேர்தலில் போட்டியிடும் ஷபீக் அனைத்து அடாவடித்தனங்களைப் புரிந்த ஒருவர்” எனவும் அவர் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
”தற்போதைய போராட்டம் இஸ்லாமிய வாதிக்கும் இஸ்லாமிய வாதியல்லாத ஒருவருக்குமிடையிலானதன்று. அது புரட்சிக்கும் புரட்சிக்கு எதிரானவா்களுக்குமிடையிலானது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் அஹ்மத் ஷபீக்கின் நடவடிக்கைகள் குறித்து எச்சரித்த அவா் ஏழைகள் அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு கலாநிதி முர்ஸிக்கு வாக்களிக்குமாறு வேண்டிக்கொண்டார்.
சத்தியத்திற்கு சார்பாக அனைவரையும் நிற்குமாறு கோரிய அவா் ”சத்தியமே வெற்றிபெரும். கலாநிதி முர்ஸி வெற்றி பெறுவார். ஆனால் சத்தியத்திற்கு உதவுவதில் அனைவரும் பங்காளியாக வேண்டும்” எனவும் அவா் வேண்டிக் கொண்டார்.

Post a Comment