ஒஸாமா பின்லேடன் எங்களுடைய கதாநாயகன் - தெக்ரிக்- இ-தலிபான்
பாகிஸ்தான் அபோதா பாத்தில் இருந்த அல்கொய்தா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை இளம் கண்டு உறுதி செய்ய பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்டிரி பின்லேடன் குடும்பத்தாரின் ரத்த மாதிரிகளை தந்திரமாக எடுத்து அமெரிக்க உளவுப்படையிடம் கொடுத்தார். அதன் பிறகே அங்கு தங்கியிருப்பது பின்லேடன்தான் என உறுதி செய்யப்பட்டது.
தற்போது பின்லேடன் கொல்லப்பட்ட நிலையில் டாக்டர் ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டு அவருக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பின்லேடனை அமெரிக்க உளவுத்துறைக்கு காட்டிக் கொடுத்ததற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
டாக்டர் அப்ரிடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் பின்லேடனை காட்டிக் கொடுத்ததற்காக அவருக்கு தண்டனை வழங்கவில்லை. தீவிரவாதிகளுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். அதற்காக தான் அவர் கைது செய்யப்பட்டார் என பதில் அளித்தது. ஆனால், இதை போராளி அமைப்புகள் மறுத்துள்ளன.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-தலிபான் மற்றும் லஸ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் செய்தி தொடர்பாளர்கள் மறுத்துள்ளனர். பாகிஸ்தான் தெக்ரிக்- இ-தலிபான் செய்தி தொடர்பாளர் இஷாசெல்லா இஷான் கூறும்போது, அமெரிக்காவின் வற்புறுத்தலால் டாக்டர் அப்ரிடியை விடுதலை செய்ய அரசு புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
பின்லேடன் எங்களது ஹீரோ. அவரை கொல்ல அமெரிக்காவுக்கு டாக்டர் அப்ரிடி உதவி செய்துள்ளார். எனவே அவர் எங்களது எதிரி அவர் செய்த இந்த குற்றத்துக்கு அவரது மரணம் மட்டுமே அபராதமாகும். அவர் விரைவில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்குள் அவரை நாங்கள் கொலை செய்வோம் என்றார்.
லஸ்கர்-இ-இஸ்லாம் செய்தி தொடர்பாளர் அப்துல் ரஷீத் கூறும்போது, டாக்டர் அப்ரிடியுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கையில் சிக்கினால் அவரை கொல்வோம் என்று தெரிவித்தார்.

Post a Comment