Header Ads



யாழில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு வீடு அமைத்து தாருங்கள் - சிங்கப்பூரிடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ள மக்களுக்காக மேலும் 60 ஆயிரம் வீடுகளை அமைக்க உதவி  செய்யுமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. ஷண்முகம் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மீள்குடியேற்றம் செய்யப்படுபவர்களுக்காக இந்திய அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றினால் பல வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு உறுதிமொழியை வழங்காத சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர், தமது அரசாங்கத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீள்குடியோற்றம் தொடர்பில் ஆராயும் முகமாகவே சிங்கப்ப+ர் வெளிவிவகார அமைச்சர் கே. ஷண்முகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.