அமெரிக்காவுக்கு அடிபணிந்தது பாகிஸ்தான் - எதிர்த்துப்போராட இஸ்லாமிய தலைவர்கள் அழைப்பு
ஆப்கானிஸ்தானுக்கு எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் நேட்டோ படையினரின் வாகனங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான எரி பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேட்டோ படைகள், தவறுதலாக வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 24 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் சாலையை பாகிஸ்தான் மூடி விட்டது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் முகமது அலி கர்தேசி குறிப்பிடுகையில், "நேட்டோ வாகனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்தச் சாலைகளைச் செப்பனிட 136 கோடி ரூபாய் செலவாகும். எனவே, இந்தச் செலவை ஈடுகட்டும் வகையில், நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நேட்டோ வாகனத்துக்கும் கணிசமான கட்டணம் வசூலிக்க வேண்டும், என பரிந்துரை செய்திருந்தார்.ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோ வாகனங்கள் செல்லும் பாதையைத் திறந்து விடும்படி அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வருவதால், பாகிஸ்தான் சாலையைப் பயன்படுத்தும், நேட்டோ வாகனம் ஒவ்வொன்றுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் வீரர்களைக் கொன்ற நேட்டோ படைகளுக்காக, மீண்டும் ஆப்கன் பாதையைத் திறக்கக்கூடாது'என, ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீது உள்ளிட்ட 40க்கும் அதிகமான தலைவர்கள், அரசை வற்புறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு பாகிஸ்தான் அடிபணிந்து விட்டதாகக் கூறும் தலைவர்கள், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.

எங்கு அள்ளாஹ்வின் பயமும் நாட்டு பண்பாடு நாகரீகம் நேர்மை லஞ்சம் எல்லாவற்றிலும் நிதானம் கடைப்பிடிக்கக்கப்படுமோ அள்ளாஹ்வின் உதவி நிட்சயம் உண்டு
ReplyDelete